×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியப் பாரம்பர்ய நடனம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்டவர்களை குணப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன

by Rina Chandran | @rinachandran | Thomson Reuters Foundation
Wednesday, 24 February 2016 08:56 GMT

In a 2005 file photo, an Indian dancer presents Kathak dance during National Dancers Festival in the northern Indian city of Jammu. REUTERS/Amit Gupta

Image Caption and Rights Information

  மும்பை, பிப் 24 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) ---& விபச்சாரத் தொழில் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றுக்குப் பலியாகியிருந்து மீட்கப்பட்டவர்களை பாரம்பர்ய இந்திய நடனங்கள் குணப்படுத்தும் ஒரு வலுவான வடிவமாக இருக்க முடியும், கசப்பான அனுபவங்களிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு உதவிடும் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று ஒரு முன்னோடி ஆய்வுத்திட்டம் காட்டியிருக்கிறது.

கொல்கத்தா மற்றும் மும்பை மாநகரங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட 50 பெண்களிடம் ஓர் ஆறு மாத காலம்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அவர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் ஆலோசனைகளுடன் மற்றும் புனர்வாழ்வுக்கான முயற்சிகளோடு,  நடன அசைவு சிகிச்சை கொடுக்கப்பட்டதானது அவர்களுக்கு வாழ்வில் அக்கறை செலுத்தவும், தாழ்வு நிலை, கோபம் மற்றும் கசப்பான அனுபவங்களிலிருந்து மீள்வதற்கும் உதவி இருக்கிறது என்று கண்டுள்ளது.

“அடிக்கடி, ஆட்கடத்தலிலும் விபச்சார பாலியல் வன்முறையிலும் பாதிப்புக்குள்ளானவர்களின் புனர்வாழ்வில், இவை அவர்களின் உடம்பில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு குறித்து கவனிக்காது விட்டுவிடுவார்கள்,’’ என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஒரு கருணை இல்லமான கொல்கத்தா சன்வெட் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான சோஹினி சக்ரவர்த்தி கூறினார்.

“நடனம் என்பது உடம்பு குறித்ததாகும். பெண்கள் ஏதோ ஒருவிதத்தில் நடன வடிவங்களுடன் பரிச்சயமானவர்கள்தான். எனவே, இவற்றின் மூலம் அவர்களை ஆற்றுப்படுத்திட உதவ முடியும் மற்றும் சமூகத்தில் அவர்களை மேம்பட்டவர்களாகவும் வெளிப்படுத்த முடியும்,’’ என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

இந்தியாவில் இவற்றால் பலியானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பது அடிக்கடி போதுமான அளவிற்கும் மற்றும் கலாச்சாரரீதியாக குறைபாடுடனும் இருக்கிறது. இதனால்தான் அவர்கள் ஆலோசனைகள் வழங்கும் மையங்களுக்கு வரத் தயங்குகிறார்கள் என்று பெண் உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

ஆயினும், , பாலின அடிப்படையிலான வன்முறை நாடடில் அதிகமான அளவில் இருப்பது தொடர்ந்து நீடிக்கிறது. 2014இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,30,000க்கும் அதிகமாகப் பதிவாகி இருக்கின்றன என தேசியக் குற்றப் பதிவு பிரோ (National Crime Records Bureau) அறிக்கை கூறுகிறது

சென்ற ஆண்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்டவர்களின் சுகாதாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பெரிய ஆய்வில், தென்கிழக்கு ஆசியாவில்,  காப்பாற்றப்பட்டவர்கள்  பெரிய அளவிற்கு அவமதிப்புக்கு உள்ளாவதும், அதன்காரணமாக கடுமையான அளவில் உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கண்டிருக்கிறது.

1966இல் நிறுவப்பட்ட அமெரிக்க நடன சிகிச்சை சங்கம் (American Dance Therapy Association) போன்ற நிறுவனங்களின் முயற்சிகளின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, நடனத்தை ஒரு சிகிச்சையாக மேற்கொள்வதற்கான எண்ணம் அதிகமான அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நடனம் மேற்கொள்பவரை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும், உடல்ரீதியாகவும் மற்றும் சமூகரீதியாகவும் ஆரோக்கியமானவராக உயர்த்துகிறது என்று ஆய்வுகள் காட்டி இருக்கின்றன.   

விறுவிறுப்பாக ஆடப்படும் கதக் நடனத்தை மேற்கோள்காட்டி, இந்திய நடன வடிவங்கள் சிகிச்சை அளிப்பதற்கு தன்னிகரற்ற விதத்தில் பொருந்துவதாகக் கூறினார் சக்ரவர்த்தி.

தமிழகத்தில் ஆடப்படும் பரதநாட்டியத்தில் கை மற்றும் கண் அசைவுகள் விரிவான முறையில் இருந்து பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் அதே சமயத்தில், தென்மாநிலம் கேரளாவில் நடைமுறையில் உள்ள கதகளி நடனம், ஒருவரின் கோபத்தைத் தணிக்க உதவ முடியும் என்று அவர் கூறினார். நாட்டுப்புற நடனங்களும் கூட பிணைப்பை ஊக்குவிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

அறிவியல் ஆய்வுமுறை மூலமாக நடன அசைவு சிகிச்சையின் “செயற்திறனையும் செயல்விளைவையும் நிறுவிட’’, இத்தகைய ஆய்வு அவசியமாகும். மேலும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் தரத்தை மேம்படுத்தவும் விபச்சாரத்திலிருந்தும்  பாலியல் வன்முறையிலிருந்தும் மீட்கப்பட்டவர்களுக்கு ஒரு மாற்றாக அதிக அளவில் பாதுகாப்பு முகாம்களை  அமைப்பதற்கும் இது ஊக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சக்ரவர்த்தி கூறினார்.

குறிப்பாக, கொல்கததா சன்வெட் நடன அசைவு சிகிச்சை  முறை இந்தியாவின் சூழ்நிலையில் பொருத்தமுடையது என்று ஆய்வினை மேற்கொண்ட முதன்மை ஆய்வாளர் டாக்டர் உபாலி தாஸ்குப்தா கூறினார்.

“பொதுவாக தங்களை வெளிப்படுத்திக்காட்டிக்கொள்ளாத இந்த பெண்களுக்கு இந்த நடன சிகிச்சை ஒரு மரபுவழிப்பட்ட சிகிச்சையோ அல்லது இதை ஒரு தீர்ப்புக்குரியவையோ அல்ல ,’’ என்று அவர் கூறினார். “நடனம் சிகிச்சை பலன்களை அளிக்கக்கூடியவை என்று ஏற்கனவே உள்ளுணர்வாக எங்களுக்குத் தெரியும், ஆனால் இப்போது உண்மையில் அது நன்கு வேலை செய்யும் என்று நிச்சயமாக எங்களுக்குத் தெரிந்துள்ளது.’’

 நன்றி - தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்.

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->