×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பெயான்ஸ் நிறுவனத்தின் ஐவி பார்க் உடைகள் ‘கடும் ஒழுங்குநெறி’ திட்டத்தைப் பெற்றிருக்கிறது, சில்லரை விற்பனையாளர் கூறுகிறார்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Friday, 20 May 2016 15:56 GMT

மும்பை, மே 20 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பெயான்ஸ் நிறுவனத்தின் ஐவி பார்க் என்னும் விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளானது பாடகர் பெயான்ஸ் மற்றும் டாப்ஷாப் தொழில் அதிபர் பிலிப் கிரீன் ஆகிய இருவரின் கூட்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுவதாகும். இந்நிறுவனத்தின் இலங்கை உற்பத்தியாளர்(சப்ளையர்) தங்கள் ஆடைகளை உற்பத்திசெய்வதற்காக தொழிலாளர்களை ‘‘அடிமைகளைப்போல்’’ வேலை வாங்குகிறது என்று சன் செய்தியேடு கூறியிருப்பதை மறுத்திருக்கிறது,

    எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்-இல் சில உடைகளை உற்பத்தி செய்திடும் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு வெறும் 4.30 பவுண்டுகள் (6.30 டாலர்கள்) மட்டுமே ஈட்டுகிறார்கள் என்று ஞாயிறு அன்று செய்தி வெளியிட்டிருந்தது. மிகவும் ‘‘வறுமையில் வாடும் தையற்காரர்கள்’’ இருக்கும் தங்கள் வேலையும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பேசவே அஞ்சுகிறார்கள்  என்றும் அது கூறியது.

   ‘‘ஐவி பார்க் ஒரு கடும் ஒழுங்குநெறி வர்த்தகத் திட்டத்தைப் பெற்றிருக்கிறது. தொழிற்சாலை ஆய்வுகள் மற்றும் தணிக்கைகள் குறித்து தொடர்ந்து இடைவிடாத மேற்கொள்ளப்படும் எங்கள் முயற்சிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் குழுக்கள் உலகம் முழுதும் உள்ள எங்களுக்கு ஆடைகளை நெய்து கொடுப்பவர்களுடனும் அவர்களுடைய தொழிற்சாலைகளுடனும் ஆடைகளை முழுமையாக நெய்து தருவது குறித்து மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறோம்.’’ என்று ஐவி பார்க் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் மின் அஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.

   ‘‘எங்களுக்கு ஆடைகளை நெய்து கொடுப்பவர்கள் எங்கள் நடத்தை விதிகளுக்கு உட்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் இத்தேவைகளை எய்துவதில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்,’’ என்று அது கூறியது.

2013ஆம் ஆண்டில் 1100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறப்பதற்குக் காரணமாக அமைந்த பங்களாதேஷ் ராணா பிளாசா தொழிற்சாலை பேரிடருக்குப்பின், தெற்கு ஆசிய ஆடைஅணிகலன் உற்பத்தியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்திருக்கிறது.

சன் ஏடு குறிப்பிடும் டாப்ஷாப் இலங்கை தொழிலாளர்களின் ஊதியம் தெற்கு ஆசியாவில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகம் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின்படி ஆடைஅணிகலன் உற்பத்தித் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச ஊதியம் பங்களா தேஷில் மாதத்திற்கு 68 டாலர் என்றும். இலங்கையில் 71 டாலர் என்றும். பாகிஸ்தானில் 120 டாலர் என்றும் கூறுகிறது,

 வேலை நிலைமைகளும் கூட தெற்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளைவிட இலங்கையில் உள்ள ஆடை அணிகலன் தொழிற்சாலைகளில் ‘‘பொதுவாக சிறப்பாக’’ இருப்பதாக உலக வங்கி சென்ற மாதம் ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.

இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஆண்டிற்கு சுமார் 4.4 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும். அவை ‘‘மிகவும் மதிப்புமிக்க, அனைவரும் அடையாளம் காணக்கூடிய விதத்தில் நெய்யப்பட்ட இந்த ஆடைகள்’’ இந்த பிராந்தியத்தில் மற்ற இடங்களில் உள்ளவர்களைவிட மிகவும் சிறந்தமுறையில் படித்த மற்றும் திறமைமிகு தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டவைகளாகும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

ஆயினும், ஆசியா நாடு அரசாங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அளவுகளை இந்நிறுவனங்கள் பொதுவாக  பூர்த்தி செய்யும் அதே சமயத்தில், இந்த ஊதியங்கள், ‘‘ஒரு நபர் வாழ்வதற்குத் தேவையான ஊதியத்தைவிட மிகவும் குறைவாகவே’’ இருக்கின்றன என்று சுத்தமான ஆடைகளுக்கான பிரச்சார ஆதரவு குழுவினர் கூறுகின்றனர்.

இலங்கையில் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியம் அந்நாட்டின் வாழ்க்கை ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்குதான் என்று அது மதிப்பிடுகிறது,

ஆசியா ப்ளோர் வேஜ் அலயன்ஸ் (ஏ.எஃப்.டபிள்யு.ஏ.) நிறுவனத்தைச் சேர்ந்த அன்னன்யா பட்டாச்சார்ஜி, இலங்கையில் உள்ள ஆடை ஆயத்த தொழிலாளர்கள் அநேகமாக நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்கிறார்கள். ஆனால் அதற்காக மிகைநேர ஊதியம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றார்.

‘‘ அவர்கள் பெரும்பாலும் விருப்பமில்லை என்று சொல்கிற உரிமை அநேகமாக அவர்களிடம் இல்லை. அவ்வாறு கூறினால். அவர்கள் தங்கள் வேலையை இழந்துவிடலாம் என்று பயந்தார்கள்.  மேலும் பொருளாதார நிர்ப்பந்தமும் அவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்தன. எனவே இதுஒருவிதமான  கட்டாயமாக வேலை வாங்கும் வடிவம். அவர்கள் வேலையளிப்பவருக்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்,’’ என்று அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

வாழ்வூதியம் அளிப்பதை ஒரு மனித உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட ஆடை உற்பத்தி தொடர்பான அனைத்து சங்கிலித் தொடர் களையும் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை நிறைவேற்றிட அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டில் ஏஎப்டபிள்யுஏ (ஆசியா ப்ளோர் வேஜ் அலயன்ஸ்) இதைக் கூற இருக்கிறது, 

பெயான்ஸ் நிறுவனத்தின் ஐவி பார்க் ஆடைகளின் டாப்ஷாப் இணையம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டு இருந்தது, இதன் தேவை அதிகரித்து வரம்பு மீறி உபயோகிக்கப்பட வலைத்தளமே முறிந்தது. இவற்றில் காலுரைகள் (சாக்ஸ்) 6 டாலர் என்றும், விளையாட்டு மார்பகக் கச்சு (பிரா) 36 டாலர் என்றும். உடலை முழுவதுமாக மூடும் ஆடை (பாடி சூட்) 65 டாலர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது,

சன் ஏடு தன்னுடைய அறிக்கையில், இலங்கை தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வந்துள்ள ஏழை இளம் பெண்கள் என்றும், அவர்கள் விடுதிகளில் வாழக்கூடிய விதத்தில் மட்டுமே இருக்கிறார்கள் என்றும். அவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்திட வாரம் ஒன்றுக்கு 60 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது,

இதுதொடர்பாக கருத்து கூற ‘எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்’-க்கு பல அழைப்புகள் மேற்கொண்டபோதிலும்  பதில் எதுவும் இல்லை.

‘எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்’, அதன் இணைய தளத்தின்படி 15 நாடுகளில் 48 உற்பத்தி தொழிலகங்களை பெற்றிருக்கிறது,

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: ஜோ கிரிஃபின். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Working conditions in Sri Lanka's garment industry, which is largely organised, are "generally better" than in the rest of South Asia, the World Bank said in a report last month.

Sri Lanka's garment exports, which are worth about $4.4 billion a year, are largely "higher-value, niche products", made by workers who are better educated and more skilled than their peers in the region, the report said.

However, while companies generally comply with the minimum-wage levels set by governments in Asia, these wages "fall far below a wage a person could live on", according to lobby group Clean Clothes Campaign.

It estimates that in Sri Lanka the minimum monthly wage is about a fifth of the country's living wage.

Annanya Bhattacharjee of the Asia Floor Wage Alliance (AFWA)said the garment workers in Sri Lanka were probably working longer than eight-hour days and not being paid overtime.

"They often don't have the option of saying 'no' as they may lose their jobs if they do, and also because of economic coercion. So this is a form of forced labour; they're bound to the employer," she told the Thomson Reuters Foundation.

The AFWA will call on the International Labour Organization at its conference next month to adopt its recommendations for global standards for supply chains that include the recognition of a living wage as a human right.

Demand for Beyonce's Ivy Park range crashed the Topshop website on its launch in April. The collection includes socks costing $6, a sports bra at $36 and body suit priced at $65.

The Sun's report said that workers at the Sri Lanka factory, "mostly young women from poor rural villages", could only afford to live in boarding houses and had to work more than 60 hours a week to make ends meet.

Several calls to MAS Holdings for comment were not returned.

MAS Holdings has 48 manufacturing facilities in 15 countries, according to its website.

($1 = 0.6893 pounds)

(Reporting by Rina Chandran, Editing by Jo Griffin.; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, corruption and climate change. Visit news.trust.org to see more stories.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

Themes
-->