×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய, கம்போடியா தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்த முயற்சி, என்கிறது ஹெச் & எம்

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Saturday, 21 May 2016 21:25 GMT

Women with Zara (L) and H&M (C) shopping bags walk at a shopping district in central Madrid, Spain, in this 2015 file photo. REUTERS/Susana Vera

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, மே 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளின் ஆடைத் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் இங்குள்ள உற்பத்தியகங்களில் (சப்ளையர்) உரிமைமீறல்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட, இதன் பின்னர் சுவீடன் ஃபேஷன் சில்லறை விற்பனையகமான ஹென்னீஸ் & மொரிட்ஸ், தொழிற்சங்கங்கள், அரசு மற்றும் ஐ.நா. சபை ஆகியவை ஒத்துழைப்புடன் தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்துவோம் என்று கூறுகிறது.

டெல்லி மற்றும் கம்பேடியா தலைநகர் புனோம் பென் ஆகிய இடங்களில் இருக்கும் ஹெச் & எம் நிறுவனத்தின் தொழிற்கூடங்களில் ஆசியா ப்ளோர் வேஜ் அலயன்ஸ் (ஏ.எஃப்.டபிள்யு.ஏ.) மேற்கொண்ட ஆய்வுகளில் இங்குள்ள ஆடை தைக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், குறிப்பிட்ட கால ஒப்பந்தப்பணிகள், ஓய்வின்றி கட்டாயப் பணி, மற்றும் கர்ப்பிணியானால் வேலையை இழப்பது போன்ற பிரச்சினையை எதிர்கொள்ளுவதைக் கண்டறிந்தது.

மேற்கத்திய உயர்தர வீதிகளின் சில்லறை விற்பனையாளர் தங்கள் சங்கிலித் தொடரை தூய்மைப்படுத்தம் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டதாக ஏ.எஃப்.டபிள்யூ.ஏ. குற்றம் சாட்டுகிறது. இது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குழுக்களின் ஒரு கூட்டமைப்பு.

தங்களது ஃபேஷன் நிறுவனம் பல வருடங்களாக தொழிலாளர்களின் வாழ்கை நிலையை மேம்படுத்த தீவிரமாக செயல்பட்டுவருவதாக ஹெச் &எம் நிறுவனத்தின் ஒரு அதிகாரி சனியன்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

‘’ இந்த ஆய்வறிக்கை முக்கியமான பிரச்சினைகளை எழுப்புகிறது. ஒப்பந்தசேவை (சோர்ஸிங்) அளிக்கும் எங்களது சந்தைகளில் ஜவுளித்துறையில் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக நீண்டகால வளர்ச்சிக்குரிய பங்களிப்பை அளிக்க எங்களை அர்ப்பணிப்போம் ‘’ என்று கூறினார் ஹெச்&எம் மின் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு பிரிவைச் சேர்ந்த தெரேசா சுண்ட்பெர்க்.

’’ ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பிரச்சினைகள்  இந்த தொழிலில் பரவலாக உள்ளது. இவைகளை ஒரு தனிப்பட்ட நிறுவத்தின் மூலம் தீர்த்துவைப்பது என்பது என்பது கடினமானது. அதேசமயத்தில் இவைகளுக்கு ஒத்துழைப்பு முக்கியம் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்’’.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுவிடனைச் சேர்ந்த சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றோடு மட்டுமல்ல உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழிற்சங்கங்களோடும் ஹெச் & எம் கூட்டுசேர்ந்து இதற்கான தீர்வுகளைக் காண உதவிகளை நாடுகிறது என்றும் அவர் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார். 

 இந்த ஃபேஷன் துறையில் தொழிற்சாலைகளின் நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகியவை அதிகரித்துகொண்டு இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பங்களாதேஷ் ராணா பிளாசா காம்ப்ளக்ஸ் சிதைந்து 1136 ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் கொல்லப்பட்ட பின்னர் இந்த கட்டாயம் வந்திருக்கிறது.

கட்டாய மிகை நேரப் பனி, கர்ப்பப் பணி நீக்கம்

2015 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இந்த ஆய்வுகளை இந்தியாவில் ஐந்து தொழிற்சாலைச் சேர்ந்த 50 தொழிலாளர்களிடமும் கம்போடியாவில் 12 தொழிற்சாலைச் சேர்ந்த 201 தொழிலாளர்களிடமும் நடத்தப்பட்டது.

எல்லா தொழிற்சாலைகளும் முதலாளிகள் மிகை நேரப்பனி(ஓவர் டைம்)யை எதிர்பார்ப்பது கண்டறியப்பட்டது. கம்போடியன் தொழிலாளர்கள் தினமும் கூடுதலாக இரண்டு மணிநேரம் மிகை நேரப்பனியாக வேலை செய்தது பதிவாகி இருந்தது. இதுவே இந்திய தொழிலாளர்கள் நாளொன்றுக்கு குறைந்தப்பட்சம் ஒன்பது மணிநேரம் முதல் பதினேழுமணி நேரம் வரை பணியாற்றுவது பதிவாகியிருந்தது.  

இந்திய தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிடுகையில் ’’உற்பத்தி இலக்கினை அடையும் பொருட்டு தொழிலாளர்கள் வழக்கமாக அதிகாலை 2 மணி வரை வேலை செய்யவேண்டும். பிறகு அவர்கள் காலை 9 மணிக்கு பணிக்கு திரும்பவேண்டும் ‘’

’’அவர்களது நிதித்தேவையின் இன்றியமையாத நிலையில் மிகைநேரப் பனியை தொடர்ந்து செய்வதன் காரணம் குறைந்த பட்ச ஊதியமும் அவர்களது வாழ்வதற்கு தேவையான ஊதியத்தை விட குறைவானது இந்த வடிமான பொருளாதார அழுத்தமே தாமாக முன் வந்தோ அல்லது கட்டாயாமாகவோ மிகை நேரப்பனிக்கு(ஓவர் டைம்) வழிவகுக்கிறது’’ என்று கூறுகிறது.

கம்போடியாவில் 12 லில் 9 தொழிற்சாலைகளும் இந்தியாவில் அனைத்து தொழிற்சாலைகளிலும் குறிப்பிட்ட கால ஒப்பந்தப்பணி கையாளப்பட்டு இருப்பதை இந்த ஆய்வில் அறியப்பட்டது.  

இந்த ஒப்பந்தப்பணி முறை என்பது தொழிலாளர்களை எதேச்சதிகாரமாக பணி நீக்கம் செய்வது, வேலைபாதுகாப்பை இழக்க வைப்பது, பணி மூப்பு நன்மைகள் மற்றும் பணிக்கொடை, மருத்துவவசதி போன்றவைகளை இழக்கச் செய்ய வழிவகுக்கும்’’ என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதே மாதிரி இந்தியா மற்றும் கம்போடியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு மகப்பேறு சலுகைகள் கொடுப்பதிலும் பாகுபாடு இருப்பதை தொழிலாளர்கள் புகார் கூறியதையும் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

கம்போடியாவில் 12 தொழிற்சாலைகளில் 11 லில் மகப்பேறு காலங்களில் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதை சாட்சியமாகவோ அல்லது தங்களது அனுபவங்களைப்பற்றியோ கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்தியர்கள் இருக்கிற ஐந்து தொழிற்சாலைகளிலும் கர்ப்ப காலங்களில் பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது.

‘’ இதில் நிரந்தர தொழிலாளர்கள் மகப்பேறு காலங்களில் விடுமுறையில் ஊதியமில்லாமல் போக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் எனவும் அறிக்கை கூறுகிறது.

’’ ஒப்பந்தப் பணி, துண்டு விகிதம் பணி மற்றும் தற்காலிகப் பணி என பணியாற்றும் தொழிலாளர்கள் என்றாலும் அவர்கள் கர்ப்ப காலத்திற்கு பின்னர் மீண்டும் பணிக்கு வரும்போது பெரும்பாலும் முற்றிலும் புதிதாகவே ஒப்பந்தங்களை பெறுவார்கள். இதன் மூலம் அவர்களது பணிமூப்பை இழப்பார்கள்’’

ஹெச்&எம் மின்  சுண்ட்பெர்க் கூறுவது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க ஒரு நீண்டகால நடவடிக்கை தேவை. இதை தொடர்ந்து படிப்படியாக செயல்படுத்தப்படும் மற்றும் உற்பத்தியகங்களில் (சப்ளையர்) தொழிலாளர்களின் உரிமையை மேம்படுத்தப்படவும் சுவிடன் சில்லரை விற்பனையாளர் உறுதியளித்தார்.

’’இந்தியா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்புடன் நீண்ட காலத்திற்கு வாங்குவோர்களும் முக்கியம். அத்தோடு நாங்கள் இந்த சந்தையின் மேம்பாட்டை முன்னேற்ற நாங்கள் தொடர்ந்து எங்களது பங்களிப்பை தொடரவோம்’’ என்றும் சுண்ட்பெர்க் கூறினார்.

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->