×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறுநீரகக் கடத்தல் மோசடிக் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படுபவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு

by சுஜாய் தர் | Thomson Reuters Foundation
Wednesday, 8 June 2016 16:07 GMT

Indian policemen's shadows are cast on a curtain, as they stand before taking part in a ceremony to mark Police Commemoration Day in Chandigarh, India, October 21, 2015. REUTERS/Ajay Verma

Image Caption and Rights Information

கொல்கத்தா, ஜூன் 8-  (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  டெல்லியில்  உள்ள உயர்மட்ட மருத்துவமனைகளின் ஒன்றிற்கு ஏழை மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் சிறுநீரகங்களை நீக்கி விற்கும் கடத்தும் வலைப்பின்னலின் தலைவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் மீது காவல்துறையினர்  குற்றம் சாட்டியிருப்பதாக. புதனன்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். 

கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் தன் மனைவியுடனும். கைக்குழந்தையுடனும் ஒரு வீட்டில் வசித்து  வந்த டி. ராஜ்குமார் ராவ் என்பவரை செவ்வாய் அன்று மாலை காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். 

‘‘அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தில்லிக்கு மேல் விசாரணைக்காகவும் காவல்துறையினரால் வழக்கு தொடுக்கப்படுவதற்காகவும் கொண்டுசெல்லப்பட இருக்கிறார்,’’ என்று  பெயர் குறிப்பிடவிரும்பாது காவல்துறை அதிகாரி ஒருவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார். 

அதிகாரி மேலும் கூறுகையில், ராவ், மனித உறுப்புகளை அனுமதியின்றி நீக்குதல், உறுப்புகளை வணிகரீதியாக விற்றல், மோசடியாக  ஏமாற்றுதல் மற்றும் நேர்மையின்மை, தில்லுமுல்லு செய்தல் மற்றும் குற்றமுறு(கிரிமினல்) சதி உட்பட பல்வேறு குற்றங்களின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார் என்றார்.  

டெல்லியில் உள்ள இந்த்ரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் சட்டவிரோதமாக மனிதஉறுப்புகள் விற்பனை மோசடி நடைபெறுவதாக வியாழக்கிழமை அன்று காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை மருத்துவரின் இரு உதவியாளர்கள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற புலன்விசாரணைகளிலிருந்து ராவும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் இந்தியாவிலும் மற்றும் அண்டை நாடுகளிலும் இயங்கிடும் ஒரு குற்றமுறு கும்பலின் சந்தேகத்திற்குரிய உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக. காவல்துறையினர் கூறினார்கள். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது ஒன்பது ஆகும். 

உடல் உறுப்புகளைக் கடத்துபவர்கள் ஏழை மக்களை ஒத்துக்கொள்ள வைத்து அவர்களுடைய சிறுநீரகங்களை சராசரியாக 3 லட்சம் ரூபாய்க்கு விற்கச் செய்து, பின்னர் அவற்றைக் கறுப்புச் சந்தையில் அதிக லாபத்திற்கு மீளவும் விற்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறினார்கள், 

உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு உறுப்புகளைத் தானம் வழங்குபவர்கள் உறுவினர்கள் என்று நம்பச்செய்திடும் விதத்தில் மருத்தவமனை அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி இருந்தார்கள். 

இந்த்ரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை பாதிக்கப்பட்டோரிடமிருந்து உறுப்புகளை கவனக்குறைவாக நீக்கிவிட்டது என்று ஒப்புக்கொண்டது. காவல்துறையினர் மேற்கொண்டுவரும் புலன்விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவதாகவும் கூறியது. 

மாற்று சிறுநீரகங்கள் பொறுத்துபவர்களுக்குத் தேவையான சிறுநீரகங்கள் கிடைக்காது கடும் பற்றாக்குறை நிலவியதால், உடல் உறுப்புகளுக்கான கறுப்புச்சந்தை வணிகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது,

உடல் உறுப்புகளுக்கான வணிகரீதியான வர்த்தகம் இந்தியாவில் சட்டவிரோதமாகும். உடல் உறுப்பு மாற்றுக்கான நன்கொடைகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இயங்கிடும் சிறப்பு உடல்உறுப்பு மாற்றுக் குழுவால் ஏற்பளிப்பு செய்யப்பட வேண்டும்.

தில்லுமுல்லு செய்யப்பட்ட ஆவணங்களை அடையாளம் காண அப்்ப்ோல்ோ மருத்துவமனை தவறிவிட்டது. இது தொடர்பாக ஊழியர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து காவல்துறையினரால் ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் மருத்துவமனையோ தாங்கள் அனைத்து சட்டரீதியான தேவைகளையும் பின்பற்றியதாகக் கூறியது.

தற்போதுள்ள நடைமுறையில் உள்ள இடைவெளிகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஒரு சுயேச்சையான குழு அமைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய் அன்று அது கூறியது.  முன்னாள் தலைமை நீதிபதி, ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு தடய அறிவியல் நிபுணர் உட்பட அதில் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். 

(செய்தியாளர்:சுஜாய் தர்; எழுதியவர்: நிதா பல்லா: எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->