×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

மும்பையின் சிவப்புவிளக்குப் பகுதிபொதுமக்கள் குடியிருப்புப்பகுதியாக மாறும் நிலையில் பாலியல் தொழிலாளிகள் மேலும்அதிகமான அபாயத்திற்கு ஆளாகின்றனர்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Monday, 27 June 2016 13:34 GMT

மும்பை, ஜூன் 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) –  அதிகரித்து வரும் வாடகையும், மறுஉருவாக்கம் செய்யப்படும் வீடுகளும் மும்பையின் மிகப்பழைய சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து பாலியல் தொழிலாளிகளை வெளியேற்றுகின்ற நிலையில், அவர்கள் மேலும் அதிகமான சுரண்டலுக்கு ஆளாகும் நிலைக்கு ஆளாகின்றனர் என  புதிதாக வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளும், புதிய குடியிருப்புகளாக அப்பகுதி மாறிக் கொண்டு வருவதும்,இழிபெயரைத் தாங்கி நிற்கும் காமாத்திபுரா மாவட்டத்திலிருந்து பெரும்பாலான பாலியல் தொழிலாளிகளை புறநகர் பகுதிகளுக்குத் தள்ளிவிடுகின்றன. அங்கிருந்து தினமும் புறப்பட்டு வந்து வீதிகளில் வாடிக்கையாளர்களை அழைக்க வேண்டிய நிலையானது அவர்களை மேலும் அதிகமான அபாயத்தில் ஆழ்த்துகிறது என மும்பையில் உள்ள டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப்சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தின் உதவிப்பேராசிரியர் ரதூலா குண்டு தெரிவிக்கிறார்.

”பெரும்பாலும் கடத்திக் கொண்டு வரப்பட்டவர்களாக இருக்கும் இந்தப் பாலியல் தொழிலாளிகளில் பெரும்பாலோர் வெறும் அச்சுறுத்தலை மட்டுமல்ல; காவல்துறை, தரகர்கள்,வாடிக்கையாளர்கள் ஆகியோரிடமிருந்து உண்மையில் வன்முறையையும் கூடஎதிர்கொள்ள நேர்கிறது” என தன் தோற்றத்தையே மாற்றிக்கொண்டு வரும் காமாத்திபுராவைப்  பற்றிய ஓர் அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான குண்டு குறிப்பிட்டார்.

”அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வருவதன் விளைவாககட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டார்.

பாலியல் தொழிலுக்குள் இழுத்து விடப்படுவதற்காக கடத்தி வரப்படும் பெண்கள், குழந்தைகள் வந்து சேர்கின்ற இடமாகவும், இடைநிலை உறைவிடமான நாடாகவும் இந்தியா விளங்குகிறது.இவர்களில் பலரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழைகள் என்பது மட்டுமின்றி, நல்ல வேலை அல்லது திருமணம் என்ற ஆசை வார்த்தைகளால் கவர்ந்திழுத்துவரப்பட்டவர்கள். அதற்கு மாறாக, இவர்கள் மும்பை போன்ற நகரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக விற்பனை செய்யப்படுபவர்களாக மாறுகின்றனர். இதர மாநிலங்களில் இருந்தும், அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் போன்றவற்றிலிருந்தும் கடத்திக் கொண்டு வரப்படும் பெண்கள், நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் வந்து சேரும் இடமாக இந்த நிதிமையம் விளங்குகிறது.

இந்தப் பெண்களில் பலரும்விலைக்கு வாங்கப்படும்காமாத்திபுரா பகுதியானதுஒரு காலத்தில்,நூற்பாலைகள், கப்பல்தளங்கள்ஆகியவற்றிலிருந்து வரும்தொழிலாளர்களுக்கு சேவைசெய்து வந்த பகுதியாகும்.

காவல்துறையின் அதிரடிநடவடிக்கையின் விளைவாகஒரு சில பாலியல் கூடங்கள்மூடப்பட்டு விட்டன. அதேநேரத்தில் வீடுகளை இடித்துபுதிதாக மறு உருவாக்கம்செய்யும் முறை உச்சத்திற்குவந்ததன் விளைவாக,பாலியல் கூடங்கள்செயல்பட்டு வந்த பழையகட்டிடங்கள் பலவும் இடித்துத்தள்ளப்பட்டு, அவைஅடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக வளாகங்கள்,அலுவலகங்களாக மாற வழிஏற்படுத்தப்படுகிறது.

1990களின் துவக்கத்தில்இங்கு இருந்த 50,000 பேரைஒப்பிடும்போது, இப்போதுசுமார் 1,000 பாலியல்தொழிலாளிகள் மட்டுமேஇப்பகுதியில்மீதமிருக்கின்றனர் என்றுகுண்டு கூறினார்.

எனினும், இங்கிருந்துவெளியேற்றப்பட்டவர்கள்தொடர்ந்து இப்பகுதிக்குவருவது மட்டுமின்றிவீதிகளில் நின்றுவாடிக்கையாளர்களைஅழைக்க வேண்டியநிலைக்குத்தள்ளப்படுகின்றனர் என்றும்குண்டு கூறினார்.

உடல்நலப் பரிசோதனை,அடையாளத்திற்கானஆவணங்களைப் பெற்றுத்தருவது போன்ற உதவியைச்செய்ய உதவி அமைப்புகளும்கூட அவர்களை தொடர்ந்துதொடர்பில் வைத்திருக்கமுடியாத நிலை உள்ளது.

“ஓரளவிற்காவது பாதுகாப்புதரும் பாலியல் கூடங்களில்அவர்கள் இப்போது இல்லை.தெருவில்  நிற்பதால் ஏற்படும்அனைத்து வகையானஅபாயங்களுக்கும் அவர்கள்ஆளாகும் நிலையில்உள்ளார்கள்” என குண்டுகூறினார்.

“அவர்களோடு இணைந்துசெயல்படுவது, அவர்களைஅணுகுவது ஆகிய உதவிஅமைப்புகளின் திறனும் கூடபெருமளவிற்குக் குறைந்துவிட்டது. இதன் விளைவாக,அவர்களுக்கு இதுவரைகூடுதலாகக்   கிடைத்து வந்தகாபந்து மற்றும் பாதுகாப்புஆகியவைஅகற்றப்பட்டுள்ளது” i  கூறினார்.

போதைப் பொருட்கள் மற்றும்குற்றங்கள் குறித்த ஐக்கியநாடுகளின் அலுவலகம்தெரிவிக்கும் வகையில்தென்கிழக்கு ஆசியாவிற்குஅடுத்து  ஆட்கடத்தல் மிகவேகமாக வளர்ந்து வரும்பகுதியாக தெற்காசியாவிளங்குகிறது.

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->