×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வரவிருக்கும் தடைக்கு முன்பாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர் வாடகைத் தாய்மார்கள்

Thursday, 19 January 2017 05:00 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

  மும்பை, ஜன. 19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - புதுதில்லிக்கு வெளியே உள்ள வசதியானதொரு குடியிருப்புப் பகுதியான குருக்ராமில் உள்ள ஒரு பங்களாவின் உள்ளே கர்ப்பத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கும் ஒரு பெண்கள் குழு தாங்கள் பிரசவிக்க இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பாகப் பெற்றெடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையை தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இல்லையெனில் அவர்கள் பெரும் தொகையை நிரந்தரமாக இழக்க வேண்டியிருக்கும்.

வணிகரீதியான வாடகைத் தாய்மை முறையை தடை செய்வதை நோக்கி இந்தியா நகர்ந்து வருகின்ற நேரத்தில் அதிகரித்து வரும் தேவைக்கேற்ப இந்த வாடகைத் தாய்களுக்கான மையத்தின் ஒவ்வொரு படுக்கையும் நிரம்புகின்றன. இதற்கு முன்பு எப்போதுமில்லாத வகையில் வெற்றிகரமான பிரசவம் என்பது முக்கியமானதாக மாறியுள்ளது.

பிப்ரவரியில் துவங்கவிருக்கின்ற இந்தியப் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டம் வணிக ரீதியான வாடகைத் தாய்மை முறையை சட்டவிரோதமாக ஆக்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றி விடுமானால், இந்த நாட்டில் தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விடுகின்ற கடைசி தாய்மார்களாக இவர்கள்தான் இருப்பார்கள். 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்தப் பழமையான தொழில் ஆண்டுக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாக மதிப்பிடப்படுகிறது.

இத்தகைய கருத்தரிப்பு மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கான “குழந்தை உற்பத்தி மையங்களாக” இருப்பதாகவும், ஏழ்மையான, படிப்பறிவற்ற பெண்கள் தாங்கள் முழுமையாக உணராத ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் சென்று முடியும் வகையில் ஒழுங்குமுறை ஏதுமற்ற தொழிலாக இது இருப்பதாகவும், இந்தியாவின் வாடகைத் தாய்மார்கள் தொழில் பெண்கள் உரிமைகளுக்கான குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.                                        

எனினும் இந்த மசோதா இத்தகைய பெண்களில் சிலரைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டதாக இருந்தபோதிலும், சுமார் ரூ. 4,00,000 பெறுவதற்கான கடைசி வாய்ப்பிற்காக அவர்கள் வரிசையில் நிற்கின்றனர். இல்லையெனில் இவ்வளவு பணத்தை தங்களால் கனவில் மட்டுமே காண முடியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில்தான் 32 வயதுடைய ரசியா சுல்தானாவின் கருப்பையில் சினைக்கரு வைக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவர் இத்தகைய கருத்தரிப்பு மையங்களுக்காக கருமுட்டையை தானம் செய்வோர், வாடகைத் தாய்மார்கள் ஆகியோரை ஏற்பாடு செய்து அதற்கான ஒவ்வொரு பரிந்துரைக்கும் ரூ. 5,000 வெகுமதியாகப் பெற்று வந்தவர்தான். என்றாலும் இந்தத் தடையைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்றே தானும் ஒரு வாடகைத் தாயாக மாறுவது என்று அவர் முடிவு செய்துவிட்டார்.

“நான் நினைத்துக் கொண்டிருந்தது போல சிறுநீரகத்தைப் பணத்திற்காக விற்பதை விட, குழந்தையைப் பெற்றுக் கொள்வது நல்லது என்ற எனது முடிவை எனது குழந்தைகளும் ஆதரித்தன” என்று அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

அவர் இந்த மையத்தில் 9 மாதங்கள் தங்கியிருப்பார். வாரத்திற்கு ஒரு முறை தன் குழந்தைகளை அவர் சந்திக்க முடியும். பாதுகாவலருடன் மட்டுமே அவர் வெளியே செல்ல முடியும்.

“இவையெல்லாம் சிறு சிறு சமரசங்கள்தான். இந்த அளவு பணத்தை சம்பாதிக்க எனக்கு வேறு எந்த வழியும் இல்லை.”

அடிமைத்தனத்திலிருந்து வாடகைத் தாய்மை

முறையற்ற செயல்களை இந்தத் தடை கட்டுப்படுத்தும் என இந்திய அரசு நம்புகிறது.

“இந்த வாடகைத் தாய்மார்களின் உடல்நலம் குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம். குழந்தைகளின் சட்டபூர்வமான, நிதி ரீதியான உரிமைகளும் இதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது” என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைச் சேர்ந்த மனோஜ் பந்த் குறிப்பிட்டார்.

“வணிகரீதியான வாடகைத் தாய்மையை சட்டரீதியானதாக ஆக்காத முன்னேறிய, வளரும் நாடுகளுக்கு இணையாக இருக்கவே இந்தியா விரும்புகிறது.”

இந்த வாடகைத்தாய்மைக்குத் தடை வரும் வரையில் விந்துவை நேரடியாகச் செலுத்தப்படும் செயற்கை கருத்தரித்தல் மற்றும் கரு பரிமாற்றமான முறையில் கருமுட்டையை கருப்பையில் வைப்பது ஆகிய செயல் முறைகளின் மூலம் மற்றொருவரின் குழந்தையை சுமப்பதற்காக பெண்களுக்குப் பணம் கொடுத்து வரும் ஒரு சில விரல் விட்டு எண்ணத்தக்க நாடுகளில் ஒன்றாகவே இந்தியா தொடர்ந்து இருக்கும்.

இந்த குர்கிராம் மையத்தில் இருக்கும் பெண்களில் பெரும்பாலோர் அவர்கள் முன்பு வேலை செய்து வந்த தொழிற்சாலைகளுக்கு மிக அருகில் உள்ள வெளியிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கான குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மணிக்கு ஐம்பது உடைகளைத் தைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த  ரூபி குமாரி – அவரது மேலாளர் அதை 60 லிருந்து 70 வரையும் கூட நீட்டிக்கவும் செய்வார் – இவ்வாறு 12 மணி நேரம் வேலை செய்து நாளொன்றுக்கு ரூ. 250 –ஐ மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்தபோது, தான் வேலை செய்து வந்த ஏற்றுமதி நிறுவனத்தில்தான் இந்த வாடகைத் தாய்மை முறையைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

ரூ. 4,00,000 சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு என்பதே அவரைக் கவர்ந்திழுத்தது. அவரும் தன் கருப்பையை வாடகைக்கு விட சம்மதித்தார்.

“நான் குழந்தை பெற்ற அன்றே, குழந்தையின் பெற்றோர்கள் எனக்கு கொடுக்க வேண்டிய தொகையோடு கூடவே ரூ.50,000 பரிசாகக் கொடுத்தனர்” என குமாரி கூறினார். “நான் திரும்பி வந்து என் மகளை ஆங்கில வழிப் பள்ளியில் சேர்த்தேன்.”

குமாரியின் கணவரும் கூட ஓர் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில்தான் வேலை செய்கிறார். அவர் இஸ்திரி போடும் ஒவ்வொரு துணிக்கும் ரூ. 2 கூலியாகப் பெறுகிறார். தற்போது வாடகைத் தாயாக இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி வரும் குமாரி, இந்த வாடகைத் தாய்மை இல்லை எனில் தனது குடும்பத்திற்கு எதிர்காலமே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

குமாரியைப் போலவே, ஜெயலஷ்மி வர்மாவும் கூட வாடகைத் தாய்தான். “தாய்மையைப் பரிசளிப்பதை” ஏன் தவறானது என்று கூறவேண்டும்? தனக்கு மரியாதையும் பணமும் பெற்றுத் தரும் வேலையை ஏன் சட்டவிரோதமாக்க வேண்டும்? என்றும் அவர் வியப்புடன் கேள்வி எழுப்பினார்.

தனியாக மூன்று குழந்தைகளை வளர்த்து வரும் அந்த 28 வயது தாய் கூறினார்: “எனது மாமனார்-மாமியார் என்னை வீட்டை விட்டுத் துரத்தினர்.  நான் வேலை செய்து வந்த ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் வேலையை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. ஆனால் இங்கே ஒரு குழந்தையை சுமப்பதற்காக நான் மதிக்கப்படுகிறேன்.”

இத்தகைய வாடகைத் தாய்மை தடை செய்யப்படுமானால் மீண்டும் தொழிற்சாலைக்குச் செல்வதைத் தவிர தனக்கு வேறு வழியேதும் இல்லை என்றும் வர்மா குறிப்பிட்டார். “வேறு என்ன தனித்திறமை என்னிடம் இருக்கிறது?”

ஏழைப்பெண்களை சுரண்டலிலிருந்து பாதுகாக்க அரசு விரும்பினால், இந்தத் தொழிலை அது தடை செய்வதற்குப் பதிலாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வாடகைத் தாய்மைக்கான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

“வாடகைத் தாய்மை குறித்த மசோதா பெண்களின் பாதுகாப்பிற்கான எதையும் கொண்டிருக்கவில்லை. வணிக ரீதியான வாடகைத் தாய்மையை தடை செய்வதன் மூலம் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றே அது கருதுகிறது” என இந்திய வாடகைத் தாய்மைக்கான சட்ட மையத்தைச் சேர்ந்த ஹரி ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒழுங்குபடுத்தப்படாத தொழில்

குருக்ராம் மையத்தின் சொந்தக்காரரான சரிதா ஷர்மா தனது ஊழியரிடம் சினை முட்டை தானத்திற்கான தேவையை படித்துக் காண்பிக்கிறார்: “நல்ல நிறம், பி பாசிட்டிவ் ரத்த வகையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.”

ஒரு சில நொடிகளிலேயே கேமராவை நோக்கி சிரித்துக் கொண்டிருக்கும் அழகான இளம் பெண் ஒருவரின் புகைப்படம் அவரது கைபேசியில் வந்து சேர்கிறது. அவர் உடனடியாக மருத்துவ மனைக்கு தகவல் தெரிவிக்கிறார். இவ்வாறு சினை முட்டையை தானம் செய்யும் ஒவ்வொரு முறையும் இந்தப் பெண்கள் ரூ. 35,000 வெகுமதியாகப் பெறுகின்றனர்.

 “தொழில் மிகவும் மும்முரமாக நடக்கிறது” என்று கூறும் ஷர்மா கடந்த பத்தாண்டுகளாக வெளியிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கான குடியிருப்புகளில் ஏற்படுத்தியிருக்கும் விரிவான தொடர்புகளைப் பயன்படுத்தி இவ்வாறு தானம் செய்பவர்கள், வாடகைத் தாய்மார்கள் ஆகியோரை ஏற்பாடு செய்து வருகிறார்.

வாடகைத் தாய்மார்களுக்குத் தரவேண்டிய தொகை, அவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துவ மனை செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இத்தகைய வாடகைத் தாய்மைக்கு தனது ரூ. 10 லட்சம் என்ற ஒட்டுமொத்தத் தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  “எங்களிடம் பதிவு செய்துள்ள சுமார் 1,000 பெண்கள் என்னிடம் உள்ளனர்” எனவும் ஷர்மா குறிப்பிட்டார்.

இதற்கான தேவை அதிகரித்திருப்பதைப் போலவே இது தொடர்பான கவலைகளும் அதிகரித்துள்ளன.

இவ்வாறு சினை முட்டைகளை தொடர்ந்து தானமாக வழங்குவது, கருவுறுவது ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்கள், உடல்நலச் சிக்கல்கள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு இந்தப் பெண்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதை புதுதில்லியில் செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் பற்றிய ஓர் ஆய்வின் ஒரு பகுதியாக தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-லிருந்து சமூகவியலாளர் துளசி பட்டேல் மேற்கொண்ட ஆய்வு கண்டறிந்தது.

கருவுறுவதற்கான வாய்ப்பை மேலும் சிறப்பாக்குவதற்காக கருப்பையினுள் அனுமதிக்கப்பட்ட மூன்று சினைமுட்டைகளுக்கு மேலாகவும் சில நேரங்களில் இந்த மருத்துவ மனைகள் செலுத்துகின்றன என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

“என்றாலும் கூட இதில் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே ஒரு வாடகைத் தாயைக் கூட நாங்கள் காணவில்லை” என்றும் பட்டேல் தெரிவித்தார்.

இத்தகைய தடையானது இத்தொழிலை தலைமறைவாகச் செயல்படும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதோடு, வாடகைத் தாய்மைக்கு முன்வரும் பெண்களை உடல்நல ரீதியாக மேலும் அபாயங்களுக்கு ஆளாக்கும் நிலைக்கும் தள்ளிவிடும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இப்போதைய நிலையைப் பொறுத்தவரையில் கடைசியாக வாடகைத் தாயாக இருப்பவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் உள்ளனர். “எனக்கென சொந்தமாக ஓர் அழகு நிலையத்தைத் துவக்க விரும்புகிறேன்” என நான்கு மாத கர்ப்பிணியான, கணவன் இன்றி குழந்தையை வளர்த்து வரும் 24 வயது ஜோதி பால் குறிப்பிட்டார்.

“முடியுமானால் இதை (வாடகைத் தாய்மையை) நான் மீண்டும் செய்வேன்.”

 

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

She will stay at the centre for nine months, meet her children once a week and only go outside with an escort.

"These are small compromises. I have no other option to make this kind of money."

SLAVERY TO SURROGACY

The Indian government believes the ban will check unethical practices.

"We are concerned about the health of the surrogate mother and that the legal and financial rights of the child are protected," said Manoj Pant from the Ministry of Health and Family Welfare.

"India wants to be on par with developed and developing nations that do not legitimise commercial surrogacy."

Until the ban on surrogacy passes, India continues to be among a handful of countries where women can be paid to carry another's child through in-vitro fertilisation and embryo transfer.

Most women at the Gurugram centre are from migrant colonies close to the sweatshops where they once worked.

Ruby Kumari, 35, heard about surrogacy three years ago at the export factory where she worked 12-hour shifts, stitching 50 garments an hour - a target her manager would stretch to 60 or even 70 - and earning 250 rupees a day.

The possibility of earning 400,000 rupees hooked her and she agreed to rent her womb.

"The day I delivered, the child's parents gifted me 50,000 rupees in addition to my fee," Kumari said. "I came back and enrolled my daughter into an English-medium school."

Kumari's husband also works in a garment factory and makes 2 rupees for each item he irons. Pregnant with her second surrogate child, Kumari said her family had no future if not for surrogacy.

Like Kumari, Jayalakshmi Verma is another surrogate who wonders why "gifting motherhood" is wrong and why work that earns her respect and money would be made illegal.

The 28-year-old single mother of three said: "My in-laws threw me out of their house, my manager at the export factory was abusive and I was forced to quit. Here I have got respect for carrying a child."

Verma said she will have no choice but to return to the factory if surrogacy is banned. "What other skill do I have?"

Surrogacy law experts say that if the government wishes to protect poor women from being exploited, it should regulate the sector rather than banning it.

"The surrogacy bill does not make any provision for the protection of women, assuming that banning commercial surrogacy will protect them," said Hari Ramasubramanian of Indian Surrogacy Law Centre.

UNREGULATED BUSINESS

At the Gurugram centre, owner Sarita Sharma read out the requirements for an egg donor to a staff member: "Fair complexion, B positive."

Within seconds, a picture of a fair young woman smiling into the camera flashes up on her phone and she quickly alerts the clinic. Women receive 35,000 rupees for each donation.

"Business is brisk," said Sharma, who has been arranging donors and surrogates for the last decade using a wide network of agents in migrant colonies.

She said demand for her 1 million rupee pregnancy packages - covering the surrogate's fee, food, accommodation and hospital expenses - has shot up. "I have about 1,000 women registered with us," Sharma said.

Yet as demand soars, so do concerns.

As part of a study on infertility clinics in New Delhi, sociologist Tulsi Patel from the Delhi School of Economics found poor awareness among women about the health complications and risks that repeated egg donations and pregnancies can cause.

The study also found that in some cases, clinics would transfer more than the permissible number of three embryos into the uterus to better the chances of pregnancy.

"But we did not find a single case of a woman forced into surrogacy," Patel said.

Experts fear the ban may push the industry underground, making women offering surrogacy services only more vulnerable to health risks.

For now, the last surrogates still hope to realise their dreams. "I want to start my own beauty parlour," said Jyoti Pal, 24, a single mother who is now four months pregnant.

"And I will do it again if possible."

($1=68.01 Indian rupees)

(Reporting by Roli Srivastava; Editing by Ed Upright. Please credit Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, property rights, climate change and resilience. Visit news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->