×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சட்ட உதவி மையங்கள் இந்தியாவில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளைப் பெற்றுத் தருகின்றன

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 8 February 2017 15:52 GMT

Sex workers (foreground) watch the celebrations of Raksha Bandhan festival in a red light area in Mumbai August 4, 2009. REUTERS/Punit Paranjpe

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, பிப். 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தானே நகரின் அமைதியான ஒரு தெருவில் பாரம்பரியமான மளிகைக் கடை, சிகை அலங்கார நிலையம் ஆகியவற்றோடு கூடவே புதிதாக முளைத்திருக்கும் அந்த  அலுவலகம் அலங்காரங்கள் ஏதுமற்றதாக அமைந்திருக்கிறது.

எனினும் ஆட்கடத்தலுக்கு இரையானவர்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவர்களின் உரிமைகள் பற்றித் தெரிவிப்பதற்கென இந்தியாவின் சமீபத்திய முயற்சிதான் இந்த சட்ட உதவி மையம் ஆகும்.

“இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஏழைகளுக்கு நீதி வழங்கும் அமைப்பு ஏதுமில்லை என்றே நினைத்துக் கொண்டு விடுவிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து வாழ்க்கையில் போராடி வருகின்றனர்” என இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்  என்ற பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த மைக்கேல் யன்காட் கூறினார்.

இந்த மையத்தை யன்காட்-இன் லாபநோக்கற்ற அமைப்பு உள்ளூர் சட்ட அமைப்பான மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

கடந்த வாரம் துவங்கிய இந்த புதிய மையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கல்வி, வேலை, வீட்டு வசதி ஆகியவற்றைப் பெறுவதற்கு வழக்கறிஞர்கள் உதவுகின்றனர்.  ஓராண்டுக்கும் மேலாகவே இந்த வசதிகளைப் பெற அவர்கள் தகுதியானவர்களாக இருந்தனர்.

இத்தகைய சட்ட உதவி மையங்கள் இலவசமாக சட்ட சேவைகளைப் பெறவும், சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ளவும் ஏழைகளுக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதிலும் உள்ளன. எனினும் மும்பை நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானே நகரில் துவங்கப்பட்டுள்ள இந்த மையம் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எனவே முதலில் உருவாக்கப்பட்ட உதவி மையங்களில் ஒன்றாகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில்

இவ்வாறு ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  என புதியதொரு திட்டத்தை இந்தியா 2015ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, நலிந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கான திட்டங்களால் அவர்களும் பயனடைய வழி செய்யப்பட்டது.

இந்தத் திட்டங்கள் பற்றி போதிய விழிப்புணர்ச்சி இல்லை என்றும், இத்திட்டத்தின்  பயன்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சென்றடைவதற்கான வழியேதும் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் பயன்களுக்கு அனுமதி வழங்கும் அரசு அதிகாரிகளிடம் இவ்வாறு ஆட்கடத்தலில் இருந்து  தப்பித்தவர்களின் பெயர்களை கொடுப்பதன் மூலம் இந்த நிலைமையை மாற்ற முடியும் என்று தானேயில் உள்ள மையம் நம்பிக்கை கொண்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளுக்கான சட்ட உதவியும் கூட இந்த மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மும்பையில் உள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான குழுவினால் விடுவிக்கப்பட்டனர்.

2014ஆம் ஆண்டிற்கும் 2015ஆம் ஆண்டிற்கும் இடையே இந்தியாவின் பாலியல் தொழிலில் இருந்து 14,000க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் விடுவிக்கப்பட்டனர் என செய்தி நிறுவனங்கள்  தெரிவிக்கின்றன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு என மறுவாழ்வு, கைத்தொழில் பயிற்சி ஆகியவற்றை அறக்கட்டளைகள் வழங்குகின்றன. எனினும் விடுவிக்கப்பட்ட பிறகு அவர்களது வாழ்க்கை மிகவும் அதிர்ச்சிக்குரியதாக இருப்பதோடு, மீண்டும் கடத்தப்படுவதற்கான அபாயமும் தொடர்ந்து நீடிக்கிறது என்றே செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இதில் பாதிக்கப்பட்டவர் மறுவாழ்விற்கான ஏற்பாடு ஏதுமின்றி  ஓர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தால், அதுவும் மற்றொரு வகையான பாதிப்பே ஆகும். அதுவே மீண்டும் அவர் கடத்தப்படுவதற்கு உதவுவதாக அமைந்து விடுகிறது” என ஆட்கடத்தலுக்கு எதிரான ப்ரஜ்வாலா என்ற அறக்கட்டளையின் நிறுவனரான சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

சோதித்து, நிரூபணமான உண்மை

இந்த மையம் பற்றிய தகவல் காவல்துறையினர், உள்ளூர் நீதிமன்ற அதிகாரிகள், அறக்கட்டளைகள் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை அவர்கள் இந்த மையத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

“தானே நகருக்கு மிக அருகில் உள்ள பிவாண்டி, கல்யாண் ஆகியவற்றில் ஆட்கடத்தல் குறித்த வழக்குகள் உள்ளன. எனவே இந்த மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என தானே நகரின் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியான டி. என். கேர் குறிப்பிட்டார்.

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இந்தியாவில் ஆட்கடத்தல் பற்றிய புகார்கள் 2015ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும் அரசாங்கத் திட்டங்கள் குறித்து வழக்கமாக காணப்படும் சந்தேகப் பார்வை இந்த சட்ட உதவி மையங்களுக்கு வரும்போது காணாமல் போய்விடுகிறது.

ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்கள் இத்திட்டத்தின் பயன்களை பெறுவதே இதற்கான காரணம் என கிருஷ்ணன் தெரிவித்தார்.

 “2003ஆம் ஆண்டிலிருந்து அரசுத் திட்டங்களின் கீழ் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700 பெண்களுக்கு வீட்டு வசதியைப் பெற்றுத் தர எங்களால் முடிந்தது. இதையே மாடலாக எடுத்துக்கொண்டு இப்போது நாடு முழுவதிலும் செயல்படுத்தப் படுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

The legal aid clinic in Thane, in the Indian state of Maharashtra, is one of the first to inform trafficking victims of their rights after liberation from the sex trade, Jan 31 2017. THOMSON REUTERS FOUNDATION/International Justice Mission

News agencies say that more than 14,000 girls were rescued from the Indian sex trade between 2014 and 2015.

Charities run rehabilitation and vocational training for rescued girls, but life after liberation is often traumatic and re-trafficking remains a risk, activists say.

"If a victim is kept at a home with no rehabilitation option, it is secondary victimisation, which only contributes to trafficking," said Sunitha Krishnan, founder of the anti-trafficking charity Prajwala.

TRIED AND TESTED

The police, local court officials and charities have been told about the clinic so they can direct rescued girls for help.

"There are cases of trafficking in Bhiwandi and Kalyan that are close to Thane, so this clinic will be helpful," said D. N. Kher, a judge with Thane's District Legal Services Authority.

Reports of human trafficking in India rose by 25 per cent in 2015 compared to the previous year.

Yet the scepticism with which government schemes are usually viewed appears missing when it comes to legal aid clinics.

This is because victims are getting results, said Krishnan.

"We have managed to get housing for 700 girls in Andhra Pradesh and Telangana since 2003 under government schemes. The same model is now being applied nationally," she said.

(Reporting by Roli Srivastava, Editing by Ed Upright and Lyndsay Griffiths. Please credit Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, property rights, climate change and resilience. Visit news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->