×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பெண்களின் தன்னிறைவுக்கு வலுச்சேர்க்க மின்னணு மூலமாக ஊதியத்தை வழங்குவதற்கு ஆயத்த ஆடைத் தொழிலகங்களுக்கு எச் அண்ட் எம் ஊக்கமளிக்கிறது

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Wednesday, 8 March 2017 16:03 GMT

The logo of Swedish fashion label H&M is seen outside a store in Vienna, Austria, in this 2016 archive photo. REUTERS/Leonhard Foeger

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புதுதில்லி, மார்ச் 8 – வெளிப்படைத்தன்மை, சுரண்டலைத் தடுப்பது, பெண்களுக்குத் தன்னிறைவு அளிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய தங்கள் ஊழியர்களுக்கு கைபேசி மூலமான பணப்பரிமாற்றம் மற்றும் இதர மின்னணு முறைகளை பயன்படுத்த உலகம் முழுவதிலும் தமக்கு சப்ளை செய்து வரும் தொழிலகங்களை ஊக்குவிப்பது என ஸ்வீடன் நாட்டு நவநாகரீக ஆடைகள் விற்பனை நிறுவனமான ஹென்னஸ் அண்ட் மொரிட்ஸ் (எச் அண்ட் எம்) புதன் அன்று உறுதி மேற்கொண்டது.

உலகளாவிய நாகரீக ஆடைகள் விற்பனை நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மின்னணு ரீதியான பொருளாதாரத்திற்கு மாறிச் செல்வதற்கு அரசுகளையும் நிறுவனங்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஐ.நா. சபை எடுத்துள்ள முன்முயற்சியான த பெட்டர் தேன் கேஷ் அல்லயன்ஸ் என்ற முறையில் இணையும் முதல் உலகளாவிய ஆடை விற்பனை நிறுவனமாக அதை மாற்றியுள்ளது.

“மின்னணு ரீதியான பரிவர்த்தனைகள் எமக்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின்  ஊழியர்களின் வாழ்க்கைகளை மேம்படுத்த சிறந்த, கணக்கிடத்தக்க வழியாக அமைகிறது” என எச் அண்ட் எம் குழுவின் நீடித்த சமூகப் பிரிவின் மேலாளரான குஸ்தவி லோவென் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“இவை மிக விரைவாகவும், பாதுகாப்பாகவும், மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் தங்கள் ஊதியத்தைப் பெறுவதற்கும் நிதிரீதியான அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஆதரவு தருவதாகவும் அமைகின்றன” எனவும் அவர் கூறினார்.

எச் அண்ட் எம் குழுவிற்கு சப்ளை செய்யும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் சுமார் 65 சதவீதம் பேர் பெண்களாக, அவர்களில் பலரும் நிதி சார்பான சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளனர்.

இந்த ஏற்பாடு செலவைக் குறைத்து, பாதுகாப்பை அதிகரித்து, மேலும் துல்லியமான ஊதியம் குறித்த புள்ளிவிவரங்களை உரிமையாளர்களுக்கு வழங்கும் என்ற வகையில் ஆயத்த ஆடைத் தொழிலகத்தின் உரிமையாளர்களுக்கும் கூட மின்னணு முறையிலான பரிவர்த்தனை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வங்க தேசத்தில் ராணா ப்ளாசா தொழிலகக் கட்டிடம் சரிந்து விழுந்ததில்  1,136 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து தொழிலாளர்களின் உரிமைகள், தொழிற்சாலைகளின் நிலை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியில் நவநாகரீக ஆடைத் தொழில் உள்ளது.

தங்களுக்குப் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களில் மோசமான உடல்நிலை, குறைந்த ஊதியத்திற்கு மிக நீண்ட நேரத்திற்குப் பணிபுரிய வேண்டிய நிலை, தொழிற்சங்கங்களை உருவாக்கத் தடை விதிப்பு போன்ற பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்து சோதிக்க தவறின என்ற குற்றச்சாட்டிற்கு எச் அண்ட் எம் உள்ளிட்ட பல பெரும் விற்பனை நிறுவனங்களும் ஆளாயின.

கடந்த ஆண்டு மே மாதத்தில் தில்லியிலும், நாம் பென் நகரத்திலும் எச் அண்ட் எம் நிறுவனத்திற்காக ஆடைகளைத் தைத்துக் கொண்டிருந்த ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியம், குறிப்பிட்ட கால வரம்புடைய ஒப்பந்தங்கள், கட்டாயமாக கூடுதல் நேரத்திற்கு வேலை செய்ய வேண்டிய நிலை, கர்ப்பமுற்றால் வேலையை இழக்கும் நிலை ஆகிய நிலைமைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர் என்பதை ஆசியா ஃப்ளோர் வேஜ் அல்லயன்ஸ் அமைப்பு கண்டறிந்தது.

தொழிற்சங்கங்கள், தொழிலாளர் உரிமைகளுக்கான குழுக்கள் ஆகியவற்றின் கூட்டு அமைப்பான ஆசியா ஃப்ளோர் வேஜ் அல்லயன்ஸ் தனக்கு சப்ளை செய்து வரும் நிறுவனங்களை சுத்தம் செய்வது என்ற உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியபோது தமக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்தச் செயல்பட்டு வருவதாக எச் அண்ட் எம் நிறுவனம் அப்போது கூறியிருந்தது.

உலகத்தின் 25 நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து தமக்கான பொருட்களை வாங்கி வருகின்ற, மறைமுகமாக 16 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்ற நிறுவனமான எச் அண்ட் எம்  மின்னணு முறையிலான பரிவர்த்தனை தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள், வங்கிக் கணக்குகளை வைத்திருக்கவும், அவர்களை நிதி சார்ந்த அமைப்புகளுக்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் உதவும் என்று தெரிவித்தது.

ஒரு வங்கிக் கணக்கை வைத்திருப்பது என்பது பெண்களின் பொருளாதார ரீதியான தன்னிறைவுக்கு வழியாக அமைகிறது. ஏனெனில் பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழியாகவும், கடன் பெறுவதற்கான வழியாகவும் இருப்பதோடு, கல்வி, சொத்து அல்லது தொழிலில் முதலீடு செய்வதற்கும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்று பாலின விஷயங்கள் குறித்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: அஸ்ரிட் ஜவ்ய்நிரிட் (Astrid Zweynert). செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->