×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

உட்பார்வை – அடிமையாக விற்கப்பட்டவர்கள்: இந்தியா இழந்த தலைமுறையான காணாமல் போன குழந்தைகள்

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Thursday, 13 April 2017 09:16 GMT

In this 2012 archive photo a boy runs along a street in New Delhi. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

*          ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*          இவர்களில் 70 சதவீதம் வரை கடத்தப்பட்டு, அடிமையாக்கப்பட்டுள்ளதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

*          காவல்துறைக்கு உரிய பயிற்சி இல்லாதது; பொதுமக்களின் அலட்சியம் ஆகியவை இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தடையாக உள்ளன.

- நீதா பல்லா

புது டெல்லி, ஏப். 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் மென்மையானதொரு மதிய நேரத்தில் கிழக்கிந்தியாவின் ஒரு சிறு நகரமான ஹாட்டியாவில் தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 11 வயதுச் சிறுவன் பியுஷ் ஷர்மா காணாமல் போனான்.

உடல் மெலிந்த, பெரிய பழுப்பு நிறக் கண்களும் அடுத்தவர்களையும் தொற்றிக் கொள்ளும் சிரிப்பும் கொண்ட அந்தச் சிறுவன் அப்போதுதான் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்தான். மதிய உணவுக்கு முன்பாக சற்று நேரம் வெளியே விளையாடி விட்டு வருவதாக அவன் தன் தாயிடம் கூறியிருந்தான்.

15 நிமிடங்களுக்குப் பிறகு அவனது தாய் அழைத்தபோதோ அவன் காணாமல் போயிருந்தான்.

“அவனைப் பார்த்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. அப்போது அவன் இளஞ்சிவப்பு நிற சட்டையும், நீல அரைக்கால் சட்டையும் ஆன பள்ளிச் சீருடையில்தான் இருந்தான். யாரோ அவனை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அவன் எப்போதுமே வீட்டிற்கு அருகில்தான் விளையாடிக் கொண்டிருப்பான்” என்று பியுஷின் தாய் பிங்க்கி ஷர்மா ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹாட்டியாவிலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

“அவனைத் தேடிக் கொண்டு என் கணவர் பல இடங்களுக்கும் பயணம் செய்தார். ஆனால் யாருக்குமே எதுவும் தெரியவில்லை.ஆனால் நான் சாகும்வரை அவனைத் தேடிக் கொண்டேதான் இருப்பேன்.”

2012 ஜனவரி முதல் 2017 மார்ச் வரையிலான காலத்தில் அரசின் குழந்தையை தேடும் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,50,000 குழந்தைகளில் பியுஷும் ஒருவன். அதாவது ஓவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர்.

ஆனால் இந்த புள்ளி விவரங்கள் பனிப்பாறையின் மேலே தெரியும் முனையைப் போன்றவைதான் என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பலவும் பெற்றோர்களாலோ அல்லது காவல்துறையினராலோ பதிவு செய்யப்படுவதில்லை. இந்தக் குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்கள் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.

எனினும் வறுமை கோலோச்சி வருகின்ற நிலையில், இவர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைத் தொழிலுக்கு விற்கப்படுகின்றனர். இந்த நாட்டில் தடை விதிக்கப்பட்ட போதிலும் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது.

சிறப்பாகப் பாதுகாக்கவும், இந்த குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கவும் எண்ணற்ற முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் இவர்களில் கிட்டத்தட்ட 73,000 குழந்தைகள், அதாவது மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் இன்னமும் கண்டுபிடிக்காமலேயே உள்ளனர் என்று குழந்தைகளைத் தேடும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினர், குழந்தை நலம் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் போன்றோருக்கு போதிய பயிற்சி இல்லாமல் இருப்பது, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள இவை தொடர்பான அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு மோசமாக இருப்பது, இதனோடு கூடவே மக்களிடையே நிலவும் அதிக அளவிலான அலட்சியம் ஆகியவை இந்தியா ‘இழந்த இந்தத் தலைமுறையினரை’ கண்டுபிடிப்பதற்கான போராட்டத்திற்கு தடைக்கற்களாக உள்ளன என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

வறுமையில் ஆழ்ந்து, பின் அடிமையாகிப் போவது

குழந்தைகள் காணாமல் போவதென்பது இந்தியாவில் மிகவும் சாதாரணமானதொரு விஷயமாகவே உள்ளது. இந்தியாவின் தினசரிகளில் ஒப்பந்தங்களுக்கான அறிவிப்புகள், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் போன்றவற்றிற்கு நடுவே மங்கலான கருப்பு- வெள்ளை புகைப்படங்களோடு காணாமல் போன குழந்தை பற்றிய விவரம், தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் ஆகியவற்றுடன் கூடிய இதுகுறித்த அறிவிப்புகள் புதைந்து போய்விடுகின்றன.

10 வயதான பிண்ட்டு கடைசியாக புதுதில்லியில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தென்பட்டபோது சிவப்பு நிற ஸ்வெட்டரும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தான். 16 வயதான ஷிவானி தெற்கு தில்லியிலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே காணாமல் போனபோது நீல நிற ஜீன்ஸ் உடையில் இருந்தாள். 13 வயதான பூஜா தில்லியில் உள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் கடைசியாக தென்பட்டபோது வெள்ளை நிற சல்வார் கமீஸ் உடையில் இருந்தாள்.

இந்த அறிவிப்புகள் அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் முடிவடைகின்றன: இவ்வாறு காணாமல் போன சிறுவனை/சிறுமியை கண்டுபிடிக்க உள்ளூர் காவல்துறை தீவிரமான முயற்சிகளை எடுத்த போதிலும் இதுவரையில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை என்பதாகவே இந்த அறிவிப்புகள் இருந்தன.

பிரச்சாரகர்களின் கருத்துப்படி இந்தக் குழந்தைகளில் சிலர் மோசமாக நடத்தப்பட்ட  காரணத்தால் வீட்டை விட்டு ஓடியவர்களாக இருக்கும். மற்றவர்கள் கட்த்தப்பட்டவர்கள் ஆகும். இவர்களில் சிலர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி  ஏமாற்றப்பட்டவர்கள். ஒரு சில சிறுமிகள் காதல் வயப்பட்டவர்களாக இருக்கக் கூடும். அவர்களின் காதலர்களால் கவரப்பட்டு பின்னர் அவர்களாலேயே விபச்சாரத் தொழிலுக்கு விற்கப்பட்டிருக்கக் கூடும்.

தில்லியை தலைமையகமாகக் கொண்ட ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான சக்தி வாஹினியைச் சேர்ந்த ரிஷி காந்த் குறிப்பிடுகையில் இவ்வாறு காணாமல் போன குழந்தைகளில் 70 சதவீதம் பேர் ஆட்கடத்தலுக்கும் அடிமையாக்கலுக்கும் இரையானவர்கள் என்றார்.

“இந்த அமைப்பு பற்றி நன்றாக அறிந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால்தான் இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் கடத்தப்படுகின்றனர். எவ்வாறு அவர்களைக் கவர்வது, வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களை முதலாளிகளுக்கு விற்பது என்பதைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என இத்தகைய ஆட்கடத்தலுக்கு இரையானவர்களை மீட்பதில் ஈடுபட்டுவரும் காந்த் தெரிவித்தார்.

”இதன் விளைவாக அவர்கள் விபச்சார விடுதிகளிலும், வசதியான பெரிய வீடுகளிலும், சிறிய தொழிலகங்களிலும் அடைபட்டுவிடுகின்றனர். இதனால் அவர்களைக் கண்டுபிடிப்பதோ,  அல்லது அவர்கள் அத்தகைய இடங்களிலிருந்து தப்பிப்பதோ மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது.”

உலகத்தில் குழந்தைகள் மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி அதன் மொத்த மக்கள் தொகையான 120 கோடி பேரில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 18 வயதிற்குக் குறைந்தவர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி பல லட்சக்கணக்கானோரை வறுமையிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. எனினும் மிக மோசமான சூழ்நிலைகளில் மேலும் அதிகமான குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றனர். 2016ஆம் ஆண்டின் உலக வங்கி மற்றும் யுனிசெஃப் அமைப்பின் அறிக்கைகளின்படி உலகில் மிக மோசமான வறுமையில் ஆழ்ந்துள்ளவர்களாக கணக்கிடப்பட்டுள்ள 38 கோடியே 50 லட்சம் பேரில் 30 சதவீதத்திற்கும்  அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர்.

இத்தகையோர்தான்  நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்ற ஆசை வார்த்தைகளைக் காட்டும் ஆட்கடத்தல்காரர்களுக்கு மிக எளிதாக இரையாகி இறுதியில் கட்டாய உழைப்பிற்கு ஆளாகின்றனர்.

இதில் ஒரு சில குழந்தைகளால் தப்பிக்க முடிகிறது; அல்லது செயல்பாட்டாளர்கள் அல்லது உள்ளூர் மக்கள் ஆகியோரிடமிருந்து தகவல் பெறப்பட்டு காவல்துறையின் திடீர் சோதனைகளின்போது மீட்கப்படுகின்றனர். ஆனால் மற்றவர்களோ அந்த அளவிற்கு அதிர்ஷ்டசாலிகளாக இல்லாமல், பல ஆண்டுகாலத்திற்கு சிக்கித் தவிக்கின்றனர்.

“பிரச்சனை என்னவெனில் பல இடங்களிலும் காவல்துறை இதுபற்றிய பயிற்சி ஏதும் இல்லாதவர்களாக, தற்போது நடைமுறையில் உள்ள காணாமல் போனவர்கள் பற்றிப் பதிவு செய்வது, தேடிக் கண்டுபிடிப்பது என்ற ஏற்பாட்டோடு முறையாக ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதே ஆகும்” என மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் ஆட்கடத்தல் குறித்த இருக்கையின் பேராசிரியரும், ஆய்வு ஒருங்கிணைப்பாளருமான பி.எம். நாயர் குறிப்பிட்டார்.

“பெரும்பாலான நேரங்களில் அவர்கள் காணாமல் போகும் குழந்தைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் இடையே உள்ள தொடர்பை காணத் தவறுகிறார்கள். அதை ஒரு குற்றமாகப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்வதற்குப் பதிலாக வீட்டை விட்டு ஓடிப்போய் விட்ட ஒரு குழந்தை பற்றிய விஷயமாகவே அதைப் புறக்கணித்து விடுகின்றனர்.”

அரசு அதிகாரிகள், செயல்பாட்டாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மிகக் குறைவான  தகவல் தொடர்பே உள்ளது என்ற நிலையானது குழந்தை காணாமல் போன பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்புள்ள பகுதியில் உள்ள தங்கள் சக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை மேலும் சிக்கலாக்குகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேரடிப் பார்வையில் இருந்தும் மறைந்தபடி

இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுவாரியான புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. எனினும் ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளை கடத்திச் செல்வது, ஆட்கடத்தல் ஆகிய குற்றங்கள் கிட்ட்த்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது என  2015ஆம் ஆண்டிலிருந்து கிடைத்துள்ள அரசின் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்திற்காக வயதுக்கு வராத குழந்தைகளை கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது, விற்பது ஆகியவை தொடர்பான குற்றங்கள் இதே காலப்பகுதியில் அதிகரித்துள்ளதையும் குற்றங்களுக்கான தேசிய புள்ளிவிவரங்களுக்கான கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்கடத்தலுக்கு எதிராக மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் சிறப்பு புலனாய்வு அமைப்பு ஒன்றை வழங்கும் வகையில் நாட்டின் முதலாவது முழுமையானதொரு சட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதற்கென இரண்டு அதிகாரபூர்வமான இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. “கோயா பாயா (காணாமல் போன- கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விவரம்) என்பது பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், குழந்தையைத் தேடுவது என்ற இணைய தளம் காவல்துறை, அரசு, அறக்கட்டளை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் ஆனதாகும்.

24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி உதவி எண்கள் நாடு முழுவதிலும் கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. 2015-16ஆம் ஆண்டில் மட்டும் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்த எண்களுக்கு வந்துள்ளன. இதில் 25,000க்கும் மேற்பட்டவை காணாமல் போன குழந்தைகளைப் பற்றியவை ஆகும்.

ஆட்கடத்தல்காரர்கள்  அதிகமாகப் பயன்படுத்தும் இந்தியாவின் மிகப் பெரும் ரயில்வே வலைப்பின்னலின் மூலமாகவும் அரசு பல்வேறு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் “புன்னகை நடவடிக்கை” என்ற பெயரில் காவல்துறையும் காப்பகங்கள், ரயில் வண்டிகள், பேருந்து நிலையங்கள், சாலைகளில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கென அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகிறது.

 “ கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கென காவல்துறையினால் பெரும் முயற்சி நிச்சயமாக எடுக்கப்பட்டுள்ளது” என தில்லி குற்றப்பிரிவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எடுக்கப்பட்ட “புன்னகை நடவடிக்கை” போன்ற முன்முயற்சிகள் காணாமல் போன நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவியுள்ளது.”

காணாமல் போன குழந்தைகளில் சிலர் அடிமையான நிலையில் இன்னமும் இருக்கும் போதிலும்  இன்னமும் அவர்கள் மக்களின் பார்வையில் படும்படிதான் இருந்து வருகின்றனர். எனவே பெருமளவில் பொதுமக்களின் விழிப்புணர்ச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

நகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விளக்குகளுக்கு அருகே அவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்; நின்று கொண்டிருக்கும் கார்களுக்கு இடையே புகுந்து சென்று கார்களின் ஜன்னல்களைத் தட்டி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது தற்காலிகமான சாலையோர உணவகங்களில் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது பருத்தி, நெல், சோளம் விளையும் வயல்களில் தகிக்கும் வெயிலுக்கு நடுவே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்; விஷம் தோய்ந்த கிருமி நாசினிகளை எதிர்கொண்டவர்களாக இருக்கின்றனர்.

வசதியான நடுத்தர குடும்பங்களில் அவர்கள் வீட்டைச் சுத்தம் செய்வது; சில நேரங்களில் தங்களை விட வயதில் பெரிய குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது ஆகிய வேலைகளைச் செய்கிறார்கள். முன்பின் தெரியாதவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து பாலியல் வன்கொடுமை செய்வதற்காக முகத்தில் வண்ணங்களை வரைந்து கொண்டு பாலியல் தொழில் மையங்களில் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 “இந்தக் குழந்தைகளில் சிலர் வெளிப்படையாகவே தென்படுகின்றனர். உதாரணமாக, ஒரு சில வாரங்களுக்கு முன்னால் கடத்தப்பட்டு தில்லியில் பிச்சை எடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட, காணாமல் போன ஒரு சிறுவனை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது” என மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி பகுதியில் செயல்பட்டு வரும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான துவார்ஸ் எக்ஸ்பிரஸ்மெயில் என்ற அமைப்பின் ராஜு நேபாளி கூறினார்.

 “காவல்துறையோ அல்லது பொது மக்களோ யாராவது ஒருவர் கூட இந்தக் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பதற்கு முயற்சி செய்வதில்லை. சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அவர்கள் மாறி விட்டார்கள். ஒரு வேளை அவர்கள் ஏழையாக இருப்பதால் கூட இருக்கலாம். எனவே அவர்கள் யார்? ஏன் அங்கே இருக்கிறார்கள்? யாரோடு இருக்கிறார்கள்? என்று நாம் கேள்விகளை எழுப்புவதில்லை?”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla, எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Missing children are so common in India that notices are featured daily in newspapers across the country. Illustration photo taken April 12, 2014 in New Delhi. THOMSON REUTERS FOUNDATION/Nita Bhalla

POVERTY-STRICKEN, THEN ENSLAVED

Missing children are so common in India that notices printed in classified sections of India's daily newspapers are buried alongside tender notices and job vacancies, with blurred black and white photos alongside a description and a contact number.

Pintu, 10, last seen at a Delhi railway station wearing a red sweater and black trousers. Shiwani, 16, who vanished outside her home in southern Delhi, dressed in blue jeans. Pooja, 13, in white salwar kameez, last seen in a Delhi market.

Each notice ends in the same way: Sincere efforts have been made by local police to trace out this missing girl/boy, but no clue has come to light so far.

Campaigners say some of these children are abused runaways. Others are abducted. Some come from poor families duped by traffickers with the promise of a good job. Some are girls in love - lured by boyfriends who sell them into prostitution.

Rishi Kant from Shakti Vahini, a Delhi-based anti-trafficking charity, says up to 70 percent of the missing children found are victims of trafficking and slavery.

"Most are trafficked by organised gangs who know the system. They know how to lure, transport and sell them on to employers," said Kant, who is involved in rescuing trafficking victims.

"As a result, they end up locked in brothels, wealthy homes and small workshops - making it hard to detect them or for them to escape."

India has one of largest populations of children in the world, with more than 40 percent of its 1.2 billion people below the age of 18, according to its 2011 Census.

An economic boom of the last two decades has lifted millions out of poverty yet many children continue to be born into dire circumstances with India home to over 30 percent of the world's 385 million most impoverished children, according to a 2016 World Bank and UNICEF report.

They make easy prey for traffickers, fed promises of a job and a better life but often ending up in forced labour.

While some children manage to escape or are rescued in police raids after tip-offs from activists or local residents, others are not so fortunate, trapped for years.

"The problem is that in many places police are not trained and not integrated into the existing mechanism to register and trace missing children," said P.M. Nair, chair professor and research coordinator on human trafficking at the Tata Institute of Social Sciences in Mumbai.

"They often do not see the link between missing children and trafficking and may dismiss the case as a runaway child, rather than register it as a crime and investigate it."

There is also little communication between police, government officials and activists - making it difficult for those where the child goes missing to coordinate with counterparts where the child may have been taken, he added.

A missing persons notice for Piyush Sharma who disappeared from outside his home in Hatia, Jharkhand nine months ago. Courtesy of Pinki Sharma.

HIDDEN IN PLAIN SIGHT

Year-on-year figures are not available to determine whether the number of missing children is rising, but government crime data from 2015 shows an almost 60 percent rise in reported kidnappings and abductions of children over five years.

The National Crime Records Bureau data also show related crimes such as trafficking and buying and selling of minors for the purpose of prostitution rising over the same period.

The country's first comprehensive anti-human trafficking legislation is being drafted, providing for a special investigative agency to coordinate between states.

Two official web portals have been set up to register missing children. The "Khoya Paya", or "Lost and Found", website is for public use, while Track Child allows police, government and charities to better coordinate.

Child Line, a 24-hour toll free helpline, has been running nationally for over a decade. Over nine million calls were received in 2015/16 with over 25,000 about missing children.

The government has also launched various public awareness campaigns on India's vast railway network - the main form of transport used by traffickers - while a periodic police drive "Operation Smile" screens children in shelter homes, train and bus stations, and on the streets to find the missing.

"There has definitely been a major push by police to find missing children in the last few years," said a police official from Delhi's crime branch, who did not want to be named.

"Initiatives like Operation Smile in various parts of country has helped us find hundreds of missing children."

But some missing children are in public view despite being enslaved, escalating the need for greater public awareness, say campaigners.

They loiter at traffic lights in cities, weaving between cars and knocking on windows to beg, or in make-shift roadside eateries washing dishes, or in fields of cotton, rice and maize, toiling in the heat and exposed to toxic pesticides.

In wealthy middle class homes, they clean and care for children sometimes older than themselves, and in brothels they wait with painted faces to be raped by stranger after stranger.

"Some of these children are in the open. Just a few weeks ago, for example, we managed to find a missing boy who was trafficked and forced to beg in Delhi," said Raju Nepali from Duars Expressmail, an anti-trafficking charity based in Jalpaiguri in northeastern India.

"No one - not the police or the public - even try to inquire about these children. They have become part of normality, maybe because they are poor. So we don't question who they are, why they are there and who they are with."

(Reporting by Nita Bhalla @nitabhalla, Editing by Belinda Goldsmith; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, property rights, climate change and resilience. Visit http://news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->