×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்ட பெண்களின் எச்.ஐ.வி. சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள வீடு தேடி வந்து தரப்படும் மருத்துவம் பெரிதும் உதவுகிறது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Monday, 2 October 2017 23:01 GMT

In this 2007 archive photo sex workers stand on a roadside pavement in a red light area in Mumbai, India. REUTERS/Punit Paranjpe

Image Caption and Rights Information

  - அனுராதா நாகராஜ்

காதிரி, அக். 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காதிரி சிறுநகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நுழைந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.

இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட வீடுகளுக்குள் நுழைந்து கதவுகளை சாத்திக் கொள்வதற்கு முன்பாக அவர்கள் கிராம மையங்களில் சற்றே நின்று யாருக்காவது ஒரு வணக்கத்தைத் தெரிவிப்பது வழக்கம்.

மூடிய இந்தக் கதவுகளுக்குப் பின்னால்தான் இந்த மருத்துவர்களின் ‘முன்னுரிமை பெற்ற நோயாளிகள்’ இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாலியல் தொழிலுக்காக கடத்திச் செல்லப்பட்டு இப்போது தங்களின் எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தங்களின் மீது கவிந்துள்ள இழிபெயரோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பத்தலபள்ளியில் உள்ள தொற்றுநோய்களுக்கான மருத்துவமனையிலிருந்து வரும் இந்த மருத்துவக் குழுக்களுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் கிராமப்புறப் பகுதிகளுக்குச் செல்லும் பயணம்தான்  தங்களின் நோயாளிகளின் நிலையை சோதிப்பதற்கான ஒரே வழியாகும். இவர்களில் பலரும் தங்களின் உடல்நலம் குறித்துப் பேசுவதற்கு கூச்சப்படுபவர்கள்; மருத்துவ மனைகளுக்குச் செல்ல மறுப்பவர்கள்; பெரும்பாலும் சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தி விடுபவர்கள் ஆவர்.

“மருத்துவமனையின் சுவர்களுக்கு அப்பாலும் எங்களின் கண்காணிப்பை நாங்கள் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. வேறு வழியெதுவும் இல்லை” என மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜெரார்டோ ஆல்வாரெஸ்-உரியா குறிப்பிட்டார்.

 “நோயைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் என்ற வரம்புக்கு வெளியே யாரையும் விட்டுவிடாமலிருப்பதை உறுதி செய்ய சுகாதாரப் பணியாளர்களின் வலைப்பின்னல் ஒன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இங்கிருந்து ஏராளமான பெண்கள் கடத்திச்  செல்லப்படுவது, இடம் மாறிக் கொண்டே இருக்கும் மக்கள் தொகை என்ற நிலையில் எங்களின் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது.”

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள காதிரி சிறுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் மும்பை, புதுதில்லி, பூனே ஆகிய நகரங்களில் உள்ள பாலியல் தொழில் மையங்களுக்கு கடத்திச் செல்லப்படுகின்றனர்.

நகரங்களில் நல்ல வேலைகள், நியாயமான சம்பளம் ஆகியவற்றுக்கு ஆசை காட்டி கிராமப் புறப் பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான பெண்களையும் இளம் பெண்களையும் இரையாக்கிக் கொள்ளும் முகவர்களும் கும்பல்களும் பின்னர் அவர்களை பாலியல் தொழிலுக்கு விற்று விடுகின்றனர் என இது குறித்த செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களான பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டமான அனந்தப்பூர் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட 2016 ஆய்வு வறுமை, இதில் உள்ள அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலைமை, விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ள பகுதிகளில் நிலவும் வறட்சி ஆகியவற்றின் விளைவாக ‘ வெகு எளிதாகக் கடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என 6,200 பெண்களை கண்டறிந்துள்ளது.

இந்தப் பெண்களில் பலரும் மீட்கப்படுகின்றனர்; அல்லது அங்கிருந்து தப்பி விடுகின்றனர். எனினும் தங்களின் கடந்த காலத்தை மறப்பதற்கான புதியதொரு போராட்டத்தை எதிர்கொள்ளவே அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அதைப் போன்றே சமூக ரீதியான அவப்பெயர் மட்டுமின்றி பாலியல் தொழிலாளிகளாக அவர்களை பீடித்துள்ள எச் ஐ வி/ எய்ட்ஸ் ஆகியவையும் அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் அடங்கும்.

அபாய அம்சம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச் ஐ வியுடன் வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையோர் தென்னக மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இத்தகைய கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் மறைமுகமான நிலையானது அவர்களை கண்ணுக்குத் தெரியாதவர்களாக ஆக்குவதோடு, சுகாதார சேவைகளை பெறுவதை, குறிப்பாக  எச் ஐ வி/எய்ட்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் சுகாதார சேவைகளை பெறுவதை மட்டுப்படுத்தி விடுகிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசின் புள்ளிவிவரங்களின்படி, அனந்தப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 40 லட்சம் பேரில் 25,000க்கும் அதிகமானோர் எச் ஐ வி நோயுள்ளவர்கள் ஆவர்.

அடிக்கடி இடம் பெயர்வது, சமூகரீதியான அவப்பெயர் ஆகியவற்றின் காரணமாக எச் ஐ வி யினால் பாதிக்கப்பட்ட மேலும் அதிகமானவர்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படாமலேயே போய் விடுகிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் 7,864 புதிய எச் ஐ வி என உறுதி செய்யப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆகும்.

 “ஆட்கடத்தல், இடம் பெயர்தல் ஆகியவற்றின் விளைவாக எச் ஐ வி பாதிப்பு அதிக அளவில் உள்ளது மட்டுமின்றி, இந்தப் பகுதியில் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்” என அனந்தப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரி கே. வெங்கட்டரமணா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “குழுக்கூட்டங்கள், இன ரீதியான விழிப்புணர்வு திட்டங்கள் போன்றவை இங்கு நன்றாக செயல்படுவதில்லை. மேலும் அதிகமான தனிப்பட்ட வகையிலான அணுகுமுறைதான் நன்றாக வேலை செய்கிறது.  ”

குறிப்பிட்ட கால அளவில் நடத்தப்படும்  மருத்துவ சோதனைகள் இந்த நோயாளிகள் தினமும் எடுக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்த போதிலும் இவ்வாறுஅடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட  16 சதவீதம் பேர் சிகிச்சையை நிறுத்தி விடுகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 “அவர்கள் சாதாரணமாக தவறான வீட்டு முகவரியை தருகின்றனர். இதனால் அவர்களை கண்டுபிடித்து நோய் குறித்த தொடர்முறைக்கான சோதனைகளை மேற்கொள்வதை இயலாததாக மாற்றி விடுகிறது  ” எனவும் அவர் தெரிவித்தார்.

பாலியல் தொழில் என்பது   ”நெறிமுறையளவில் மிகவும் மோசமானது  ” என கருதப்படுகிறது. விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் தங்களின் கடந்த காலத்தை மறைப்பதற்கு மிகத் தீவிரமாகவே முயல்கின்றனர்.

 “இந்த நோய் இருப்பது உறுதியானால் அவர்களின் இனத்தவர்கள் தெரிந்து கொள்வார்கள்; தாங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர்   ” என காதிரியைச் சேர்ந்த மருத்துவ ஆலோசகரான சகுந்தலா பையல்லா தெரிவித்தார்.

 “பல நேரங்களில் அவர்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால் சோதனை செய்து கொள்ள மருத்துவ மனைகளுக்குச் செல்வதற்கான பேருந்துக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாதவர்களாக உள்ளனர்.  ”

அவப்பெயருக்கு சிகிச்சையளிப்பது

பத்தலபள்ளி – காதிரி சாலையில் உள்ள தொற்று நோய்களுக்கான மருத்துவ மனை நம் கண்ணுக்கு அவ்வளவு எளிதாகப் புலப்பட்டு விடாது.

எனினும் அதன் கண்ணுக்குத் தென்படாத இடம் – காதிரி சிறுநகரம், அதன்  பெரிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் சந்தடிகளுக்கு அப்பால் இருப்பது நோயாளிகள் தொடர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது.

லாப நோக்கமற்ற கிராமப்புற வளர்ச்சிக்கான அறக்கட்டளையால் நடத்தப்படும்  82 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பாதி பேர் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்  என்ற வகையில் இந்தப் பகுதியில் அனந்தப்பூரில் அரசு நடத்தும் மருத்துவமனை மட்டுமின்றி சுகாதார சேவைகளை வழங்குபவர்களில் முக்கியமான ஒன்றாகவும் அதை மாற்றியுள்ளது.

 “இந்த அறக்கட்டளையின் மருத்துவமனைக்கு மருந்துகள், சோதனை கருவிகள், அடிக்கடி பயிற்சியளிப்பது ஆகியவற்றை அரசு வழங்குவது மட்டுமின்றி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அவர்களும் கூட நேரடியாக நோயாளிகளை அவர்களின் இடத்திற்கே சென்று பார்க்கும் திட்டத்தை கொண்டுள்ளனர்” என இந்த மாவட்டத்தின் அரசு நடத்தும் எய்ட்ஸுக்கான திட்டத்தின் தலைவரான அனில் குமார் குறிப்பிட்டார்.

 “அதிகமான அளவில் ஆட்கடத்தலுக்கு ஆளாகும்” இந்தப் பகுதியிலிருந்து வரும் நோயாளிகள் தங்களின் சிகிச்சை பாதியிலேயே நிறுத்தி விடாமல் இருப்பதை ’நேரடியாக நோயாளிகளிடம் சென்று சிகிச்சை அளிக்கும்’ இந்த திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

எந்தவொரு நாளிலும் சராசரியாக 300 பேர் ஆலோசனை பெறுவதற்காக வந்து போவதை நல்ல காற்றோட்டமாக இருக்கும் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு தெரிவிக்கிறது.   

பலருக்கும் இங்கு வருவது இதுதான் முதல் முறை என்பதோடு, தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்ற உண்மையை முதன் முதலாக ஒப்புக் கொள்ளும் முறையாகவும் உள்ளது.

 “எங்களது நோயாளிகளில் பலருக்கும் தங்களின் கிராமத்து வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கு வரும் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என இந்த மருத்துவமனையில் எட்டு ஆண்டுகளை கழித்துள்ள ஆல்வாரெஸ் –உரியா தெரிவித்தார்.

 “அவர்கள் ஒரு முறை இங்கு வந்த பிறகு, தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். எனவே நாங்கள் எச்சரிக்கையுடன், மிகுந்த எச்சரிக்கையுடனேயே அவர்களை அணுகுகிறோம். ”

கடந்த ஆண்டில் நோய் எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையைத் துவங்கிய 642 நோயாளிகளைப் பொறுத்தவரையில்  இத்தகைய ” மனிதர்களை எடைபோடும் போக்கு இல்லாத’’ இந்த அணுகுமுறையே நன்றாக வேலை செய்தது.

மருத்துவமனையில் துவங்கிய சிகிச்சை கிராமத்திலும் தொடர்வதை சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், சில நேரங்களில் மருத்துவர்கள் ஆகியோர் உறுதிப் படுத்துகின்றனர்.

 “ஆலோசனை வழங்குவது, உடல்நலம் குறித்த சோதனைகள், சத்துள்ள உணவை வழங்குவது – ஆகிய இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை” என ஆல்வாரெஸ் கூறினார்.

“அந்த கட்டத்தை எட்டுவதற்கு நோயாளிகளைத் தேடிச் செல்லும் எங்கள் குழு ஒரு உரையாடலுடன் தான் தங்கள் பணியைத் துவங்குகின்றன. தங்களைப் பொறுத்தவரையில்  நோயாளிகளே எங்களுக்கு முக்கியம் என்று இவை சொல்கின்றனர். மற்ற விஷயங்கள் அதைத் தொடர்ந்து நடைபெறுகிறது.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Doctor Raghu Prakash Reddy (L) and Gerardo Álvarez-Uría at the Hospital of Infectious Diseases in Bathalapalli, India, November 16, 2016. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

TREATING STIGMA

The Hospital of Infectious Diseases on the Bathalapalli-Kadiri road is easy to miss.

But it is its discreet location - away from the bustle of the Kadiri town and its big bus terminal - that ensures the steady flow of patients.

Run by non-profit Rural Development Trust, the 82-bed unit gets up to half of its patients from neighbouring districts, making it one of the key health service providers in the region, besides the government-run hospital in Anantapur.

"While the government provides the Trust hospital with free medicines, testing kits and frequent training, they also have an outreach that ensures patients get treated." said Anil Kumar, head of the government-run AIDS programme in the district.

The outreach programme has ensured that patients from this "trafficking hot spot" don't discontinue treatment.

The airy outpatient department of the hospital sees an average 300 people walk in for a consultation on any given day.

For many, it was their first visit and a first acknowledgement of the fact that they are sick.

"We are aware that the journey for our patients from their village homes to the hospital is difficult," said Álvarez-Uría, who has spent eight years at the hospital.

"Once they come, we want to make sure they stay on course with the treatment. So we are discreet, very discreet."

For the 642 new patients who were started on the anti- retroviral treatment last year, it is the "non judgmental approach" that has worked.

Teams of health workers, nurses, volunteers and sometimes doctors make sure that the treatment that is started at the hospital continues in the village.

"Counselling, health checks, providing nutritious diet - they all go hand-in-hand," Álvarez-Uría said.

"To get to that point, our outreach teams start with a conversation that tells the patients they matter. The rest follows."

(Reporting by Anuradha Nagaraj, Editing by Ros Russell; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking and climate change. Visit www.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->