×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவின் 'பிரகாசமான மாநிலத்தின்' வீட்டு அடிமைத்தனத்தை அம்பலப்படுத்துகிறார் ஆடை வடிவமைப்பாளர்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Monday, 13 November 2017 12:43 GMT

Indian model Indrani Dasgupta (C) is flanked by designers Wendell Rodricks (L) and Hemant Trevedi during an announcement for India Fashion Week in Bombay in this 2003 archive photo. REUTERS/Stringer

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, நவ.13 (தாமஸ்ன் ராய்ட்டார்ஸ் ஃபவுண்டேஷன்) – பிரபலமான இந்திய ஆடை வடிவமைப்பாளர் வென்டெல் ரோட்ரிக்ஸ் தனது மூன்றாவது புத்தகத்தை எழுதத்தொடங்கும் போது ஆடம்பர உடை அவரது மனதில் இல்லை.

அவர் நினைத்துக்கொண்டிருந்ததோ அவரது அண்டை வீட்டு ரோசாவை – தனது வாழ்நாள் முமுக்க பேஸ்கமாக பணிபுரிந்த ஒர் வயதான பெண் – கோவாவில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தால் ஒரு குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டு அவர்களது குடும்பப் பெயரை கொடுத்தார்கள் ஆனால் வாழ்நாள் முழுக்க வீட்டு அடிமையாக வைக்கப்பட்டாள்.

ரோட்ரிக்ஸின் புதிய நாவல் – பேஸ்கம்:கோயேன்ஸ் இன் த ஸேடோஸ் – 21ம் நூற்றாண்டில் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கும் கோவாக்களின் பாரம்பர்யத்தில் சிக்கிக்கொண்ட நான்கு பேர்கள் பற்றிய ஒரு கற்பனை கதை.

வெளியீட்டாளர் தனது குறிப்பில் கூறியது, பேஸ்கம் பாரம்பர்யத்தில் பாதிக்கப்பட்ட சென்ற தலைமுறையின் பேசப்படாத உலகத்தை பற்றி ரோட்ரிக்ஸ் எழுதியுள்ளார், அவர்களது கதையை எதிர்காலதலைமுறைக்காக வைக்கிறார்.

’’பிரகாசமான மாநிலத்தின் இருண்ட ரகசியம்’’ என கோவாவாசியான நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

’’இவ்வனைத்தும் தெரிந்தும் கூட அக்கிராம மக்கள் அவர்களை மரியாதையுடன் நடத்தாததே பேஸ்கம்மின் மோசமான நிலை’’ என ரோட்ரிக்ஸ் தாம்ஸன் ராய்ட்டார்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

அல்டா இப்புத்தகத்தின் முக்கிய நபர் நிஜவாழ்க்கையில் ரோசாவால் ஈர்க்கப்பட்டவர், தான் மற்ற குழந்தைகளை விட வித்தியாசமானவர் என தனது 10ம் வயதில் உணருகிறார்.

தனது மற்ற ஆறு ’’உடன்பிறந்தோர்’’ பள்ளிக்கு செல்லும் போது இவர் வீட்டு வேலைசெய்யவும் மற்றவர்கள் பீங்கான் தட்டுகளில் சாப்பிடும் போது இவர் சமையல் அறையில் வேலைக்கார்களுடன் சாப்பிட்டார்.

’’முறையற்ற புணர்ச்சி, ஒருபால் புணர்ச்சி, கற்பழிப்பு, காதல், கொலை, வெறுப்பு என பேஸ்கமிடம் பல வேதனைகளும் உணர்ச்சிகளும் இருந்தது. ஆனால் இவை அனைத்தும் உண்மையே’’ என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரோட்ரிக்ஸ் கூறினார்.

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஐந்து முதல் 14 வயதுடையவர்களே ஆவர்.

இந்தியாவின் ஓர் சிறந்த சுற்றுலாதளமான கோவாவில் பேஸ்கம்மால் பாதிக்கப்பட்டோர் பொதுவாக ஏழை குடும்பங்கள் அல்லது முறைகேடாக இருந்த குழந்தைகளே என ரோட்ரிக்ஸ் குறிப்பிடுகிறார்.

‘’அவர்கள் குடும்பத்தில் ஒருவராக சேர்க்கப்பட்டு, குடும்பப்பெயர் வழங்கப்பட்டு, அவர்களின் மதங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் வீட்டில் மற்ற உடன்பிறப்புகளுக்கு கொடுக்கப்பட்டதற்கு இணையாக தங்களை தடத்தவில்லை’’ எனக் கூறினர்.

’’பெரும்பாலும் அவர்களுக்கு குடும்பச் சொத்து எதுவும் வழங்கப்படவில்லை. மற்றும் சுயநலமாக திருமணமும் மறுக்கப்பட்டது. எனவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் அக்குடும்பத்தினருக்கு அடிமையாகவே இருப்பர்’’.

 தனது தயாரின் குடும்பத்தில் பேஸ்கம் இருந்ததாகவும் ஆனால் சிறு வயதில் அதற்குரிய அர்த்தம் கூட தெரியாது என ரோட்ரிக்ஸ் கூறுகிறார்.  

தனது இருபதாம் வயதில் கோவாவில் சொந்தமாக குடியேறிய போது ரோசா தனது அண்டைவீட்டுகாரராக இருந்தார். அப்போதே பேஸ்கம் பற்றி முதலில் தெரியவந்தது எனக் கூறுகிறார். 

’’இந்த புத்தகம் ஆண் மற்றும் பெண் தனது வாழ்நாள் முழுவதும் கேள்வி எழுப்பப்படாத 200 வருட பேஸ்கம் பாரம்பர்யத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரப்படும் மன்னிப்பாகும்’’ எனக் கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->