அதிரடிச் சோதனைகளும் மீட்பு நடவடிக்கைகளும்: இந்தியாவில் உள்ள குழந்தை அடிமைத்தனத்தை அம்பலப்படுத்தும் நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தியின் திரைப்படம்

by Sebastien Malo | @SebastienMalo | Thomson Reuters Foundation
Monday, 22 January 2018 00:01 GMT

A still image from documentary film "Kailash" whose world premiere took place at the 2018 Sundance Film Festival. Courtesy Participant Media and Concordia Studio/Handout via THOMSON REUTERS FOUNDATION

Image Caption and Rights Information

செபாஸ்டியன் மலோ  

நியூயார்க், ஜன. 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குறித்த ஓர் ஆவணப்படத்தில் சொற்சொடர்களால் நிரப்பப்பட்ட வாசகங்கள் ஒருபுறம் இருக்கட்டும், அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டுள்ள குழந்தைகளை மீட்பதற்கான அதிரடி சோதனைகளும் ஒருவித வேகத்தைக் கொடுக்கின்றது. அந்தப் படத்தைக் காண்பவர்கள் நவீன அடிமைத்தனத்தை முற்றிலுமாக துடைத்தெறிவதற்கான உலகளாவிய போராட்டத்தில் ஒரு பங்கை வகிக்க உத்வேகமூட்டும் என்றும் அவர் நம்புகிறார்.

அமெரிக்காவில் சன் டான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் கடந்த வாரம் முதன் முறையாக திரையிடப்பட்ட “கைலாஷ்” உள்நாட்டில் ஆட்கடத்தலுக்கு  எதிரான முக்கிய நபர் என்பதில் இருந்து நோபல் பரிசை வெல்பவராக சத்யார்த்தி எழுச்சி பெற்றதை விவரிப்பதாக அமைந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகாலப்பகுதியில் குறைந்தபட்சமாக 80,000 குழந்தை அடிமைகளை விடுதலை செய்வதில் முக்கிய பங்கு வகித்த அமைப்புதான் சத்யார்த்தியின் அறக்கட்டளையான பாச்பன் பச்சாவ் அந்தோலன் –இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடும்; அடிமை உழைப்பில் உருவான பொருட்களை வாங்க மறுப்பது போன்ற நடவடிக்கைக்கைகளை எடுக்க அது அவர்களைத் தூண்டக்கூடும் என்று 64 வயதான சத்யார்த்தி குறிப்பிட்டார்.

“அடிமைத்தனம் அதன் கொடூரமான வடிவத்தில் இன்னமும் நீடிக்கிறது என்று பலரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்” என சுயேச்சையான திரைப்படத் தொழிலைச் சேர்ந்த திரைப்படங்களை அமெரிக்காவில் அறிமுகத் திரையிடல் செய்யும் நிகழ்வாக இப்போது 33வது ஆண்டு நடைபெறும் சன்டேன்ஸ் திரைப்பட விழாவிலிருந்து சத்யார்த்தி போனில் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“உணர்வைத் தட்டியெழுப்புவதுதான் சமூகத்தை மாற்றுவதற்கான முதல் நடவடிக்கை என நான் எப்போதுமே எண்ணி வந்திருக்கிறேன்” என பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசஃப்சாய் உடன் 2014ஆம் ஆண்டிற்கான  அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட சத்யார்த்தி மேலும் குறிப்பிட்டார்.

கையில் தூக்கியபடி படம்பிடிக்கும் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப் படங்களில் ஒன்றான இந்த ஆவணப்படத்தின் துவக்கக் காட்சிகளில் ஒன்றில் சத்யார்த்தியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இயக்கவீரர்கள் புதுடெல்லியில் பல குழந்தை அடிமைகளை அடைத்து வைத்திருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிரடியாக நுழைகின்றனர்.

இந்த இயக்கவீரர்களில் ஒருவர் தாளிடப்பட்டிருக்கும் கதவை உடைத்தபடி உள்ளே நுழையும்போது அவரது சக தொண்டர் ஒருவர் வேக வேகமாகத் தேடி கடைசியில் பிளாஸ்டிக் பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் குவியலுக்கு கீழே பீதியுடன் நோக்கும் குழந்தைகளை கண்டெடுக்கிறார். அந்தக் குழந்தைகள் அங்கேதான் ஒளித்து வைக்கப்பட்டிருந்தனர்.

சத்யார்த்தியின் குழுவினருடன் இணைந்து காட்சிகளை படம்பிடிக்க இரண்டு ஆண்டுகள் செலவழிக்க முடிந்ததன் விளைவாக புள்ளிவிவரங்களும் பேசும் நபர்களும் நிரம்பிய ஒருபடத்தைத் தயாரிப்பதைத் தன்னால் தவிர்க்க முடிந்த்து என இப்படத்தைத் தயாரித்த அமெரிக்க இயக்குநரான டெரெக் டொனீன்  குறிப்பிட்டார்.

“துயரம் தோய்ந்த குழந்தை அடிமைத்தனம் பற்றிய திரைப்படத்தைத் தயாரிக்க நான் விரும்பவில்லை. ஒருவேளை அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்றாலும் அதைப் பற்றி நீங்கள் பேச விரும்ப மாட்டீர்கள்… ஏனென்றால் அது மிகவும் கனமானதொரு விஷயம்” என “கைலாஷ்” திரைப்படத்தின் இயக்குநர் கூறினார்.

இந்தியா முழுவதிலும் எண்ணற்ற சிறுவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கடத்தப்படுகின்றனர்; அடிமைகளாக்கப்படுகின்றனர். வேலை செய்யுமாறு அவர்கள் கட்டாயப் படுத்தப் படுகின்றனர் அல்லது பாலியல் தொழில் அடிமைகளாக விற்கப்படுகின்றனர்.

இவ்வாறு கட்த்திச் செல்லப்பட்டு 2016 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட 23,000க்கும் மேற்பட்ட குழந்தைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குழந்தைகள் என அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சமூக ரீதியாகவே மிகவும் பழமையான போக்கைக் கொண்ட, தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம், அவமான உணர்வு  பழி சுமத்தல் ஆகியவற்றை இதனால் பாதிக்கப்பட்டவர் அவரது குடும்பத்தினரிடையே ஏற்படுத்தி, பெரும்பாலான நேரங்களில் அவர்களை அமைதியாக இருக்கச் செய்து, தாங்கள் சந்திக்கும் கொடுமைகள் பற்றி புகார் தெரிவிக்காமல் இருப்பதே  நல்லது என கருத வைக்கின்ற ஒரு சமூகத்தில்  இந்த அடிமைத்தனம் குறித்த புள்ளிவிவரங்கள் பெருமளவிற்கு குறைத்தே மதிப்பிடப்படுகின்றன என இது குறித்த இயக்கங்களை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் சுமார் 1 கோடி குழந்தைகள் நவீன அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர் – இவர்கள் கட்டாய உழைப்பில் சிக்கிக் கிடக்கின்றனர் அல்லது கட்டாய திருமணங்களில் ஆட்பட்டுள்ளனர் – என ஐ.நா. அமைப்பின் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐஎல்ஓ) மனித உரிமைகள் குழுவான வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனும் தெரிவிக்கின்றன.

(செய்தியாளர்: செபாஸ்டியன் மலோ @sebastienmalo; எடிட்டிங்: கேரன் கில்பர்ட். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.