×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

நாடு கடத்தப்பட்ட குழந்தைகளை விரைவாக சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்ப புதிய தகவல் தொழிற்நுட்பம்

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 15 February 2016 00:01 GMT

Children eat their lunch after being rescued from a sari embroidery factory, with the help of Nepalese police and different organizations working for child rights, at Bhaktapur, near Kathmandu July 4, 2012. REUTERS/Navesh Chitrakar

Image Caption and Rights Information

Repatriation is often biggest challenge and can take years, with lack of international coordination to verify victims' identities

- நீதா பல்லா

சிலிகுரி, மே.வங்களாம், பிப்.15(தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், நேபாளம் மற்றும் பங்களா தேஷ் நாடுகளிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு மீட்கப்பட்டவர்களை சொந்த நாடுகளுக்கு விரைவாக திருப்பி அனுப்ப, புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதை முன்னோட்டமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

தெற்காசியாவின் மையாக உள்ள இந்தியாவில் தான் இந்த விவகாரங்கள் அதிகவேகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் போதைப் பொருட்கள் குற்றப்பிரிவின் (UNODC) தகவலின் படி கிழக்கு ஆசியாவிற்கு அடுத்தப்படியாக தெற்காசியா தான் ஆட்களை கடத்தி வரப்படும் விவகாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்கிறது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளில் கவனம் செலுத்தும் இந்த தொண்டு நிறுவனங்களுக்கு, பெரும்பாலும் முக்கிய சவாலாக இருப்பது, இவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் உள்ள கடினங்கள். சில சந்தர்ப்பங்களில் இது பல ஆண்டுகள் ஆகிறதாம்.

இதற்கு முக்கிய காரணம், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுவதிலும், அவர்களது பூர்வீக இடங்களைப் பற்றி தகவலை கண்டறிவதில் உள்ள சிக்கல்கள். இந்த ஒருங்கிணைப்பில் சர்வதேச நாடுகளுக்கிடையே இடைவெளி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்த புதிய மென்பொருளை ‘திட்ட இந்திய‘ மற்றும் ‘பங்களாதேஷ் சமூக நிறுவன‘மும் இணைந்து உருவாக்கியது. டி-நெட் மூலம் எம்.சி.ஏ. என்கிற ‘‘மிஸ்ஸிங் சைல்டு அலார்ட்‘‘(காணாமல் போன குழந்தை விழிப்பு) என்கிற புள்ளிவிவர திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களில் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களது பூர்வீக இருப்பிடங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கும். இந்த தகவல்களை தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.  

‘‘மீட்கப்பட்டவர்களில் பலரை சொந்த நாடுகளுக்கு அனுப்ப முடியாமல் எங்களது முகாம்களில் மூன்று ஆண்டுகள் வரை கூட தங்க வைத்துக்கொண்டு இருந்தோம்‘‘ என்கிறார் ‘‘திட்ட இந்திய‘‘ நிறுவனத்தின் இயக்குநர் முகமது ஆசிஃப். இவர் இந்த நிறுவனத்தின் திட்ட செயலாக்கர். கடந்த சனிக்கிழை இவரை சந்தித்தோம்.

‘‘இந்த தொழிற்நுட்பத்தை முன்னோட்டமாக பரிசோதனை செய்த போது மீட்கப்பட்ட நபர்களின் சொந்த ஊர் குறித்த தகவலை சொந்த நாடுகளுடன் உடனடியாக பகிர்ந்துகொள்ள முடிந்ததோடு இவர்களை குடும்பத்தாரிடம் விரைவாக ஒப்படைக்கவும் முடிந்தது‘‘ என்கிறார்.

தெற்காசியாவில் எவ்வளவு ஆட்கடத்தல் நடக்கிறது என்பதற்கான சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால் பொது நல ஆர்வலர்கள் கூறுவது, ஏழை அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பங்களா தேஷ் போன்றவைகளிலிருந்து ஆயிரக்காண பேர்கள் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாகவும் இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் குழந்தைகளுமாக இருக்கின்றனராம்.  

இவர்கள் பெரும்பாலும் கட்டாய திருமணத்திற்கும் அல்லது கொத்தடிமையாக பணியாற்றவும் விற்கப்படுகின்றனர். சிலர் நடுத்தர குடும்பங்களுக்கான வீட்டு வேலைகள், கடைகள் ஹோட்டல்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். வேறு சிலர் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டதோடு திரும்பத்திரும்ப கற்பழிப்பிற்கும் உள்ளாகிறார்கள். 

‘மிஸ்ஸிங் சைல்டு அலார்ட்‘ என்கிற முன்னோடி திட்டம் இந்தியா பங்களா தேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்து தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, மீட்கப்பட்டவர்களின் விவரங்களை சிஸ்டத்தில் வைக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்டவர்களது நாடுகளில் உள்ள அமைப்புகள் தகவலைப் பெற்று உடனடியாக விழிப்புடன் இருக்கும்.

இந்த ஒரு வருட முன்னோடி திட்டம் கடந்த ஜனவரியில் தொடங்கியது இதனை இவ்வாண்டு இறுதியில் மதிப்பீடு செய்யப்படவுள்ளனர். மேற்குவங்களாம், சிலிகுரியில் நடந்த ஆட்கடத்திலுக்கு எதிரான மாநாட்டிற்கிடையே தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் ஆசிஃப் இது குறித்து கூறினார்.

‘‘இதில் எங்களுக்கு வெற்றியென்றால் பாதிக்கப்பட்டவர்களை தாய் நாடுகளுக்குத் திரும்ப அனுப்ப மேலும் பல பாதுகாப்புடன் மற்றும் வேகமாக பயன்படக்கூடிய தொழிற்நுட்ப முறைகளை கொண்டுவருவோம். இவைகளை மூன்று நாடுகளை அரசுகளிடம் எடுத்துச்சொல்லுவதோடு, இறுதியாக இந்த வட்டாரம் முழுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் செய்வோம்‘‘ என்றும் கூறும் அவர்,

‘‘இந்த விழிப்பு எச்சரிக்கை முறைகளை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளும் போது ஆட்களை கடத்துபவர்களுக்கு ஒரு அழுத்தம் உருவாக்கப்படுகிறது. நாடு தாண்டி தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்படுவதை அறிந்து அவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவது மேலும் கடினமாகிவிடும்‘‘ என்கிறார்.

(Reporting by Nita Bhalla, editing by Ros Russell; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, corruption and climate change. Visit news.trust.org) 
((nita.bhalla@thomsonreuters.com; +91 11 4178 1033; Reuters Messaging: nita.bhalla.reuters.com@reuters.net))

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->