×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

மீள் ஒருங்கிணைப்பு பலவீனமாக இருக்கும்பட்சத்தில் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஆபத்து - ஆராய்ச்சியாளர்கள்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Tuesday, 22 March 2016 10:51 GMT

மும்பை, மார்ச் 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - வேலைக்காக கடத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளை மீட்டு அவர்களை மீள் ஒருங்கிணைக்கும் இந்தியாவின் செயல்திட்டம் பலவீனமான ஒருங்கிணைப்பாகவும், பொறுப்பின்மை, தக்க வசதியின்மையால் வலிமையிழந்துள்ளது. இதனால் குழந்தைகள் மீண்டும் தீங்குக்குள்ளாகும் ஆபத்து என்று ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதுள்ள குறுகிய கால அணுகுமுறையானது முதலில், குழந்தைகளை எந்த சூழ்நிலைகள் கடத்தலுக்கு வழி வகுத்ததோ அதே பழைய சூழ்நிலைகளுக்கு திருப்பிவிடும். இதனால் தற்போது இருப்பதை விட, விரிவான மற்றும் விடாமுயற்சியுடன் இப்பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

”பொருளாதாரக் காரணங்களுக்காக ஒரு குழந்தை மீண்டும் கடத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்க அவர்களது குடும்பங்கள் கட்டமைக்கப்பட ஆதரவு தேவைப்படுகிறது” என்று ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் எஃப்எக்ஸ்பி ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் மையத்தின்  அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 5.7 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் ஐந்து வயது முதல் 17 வயதுடையவர்கள் என்றும் மதிப்பீடு செய்துள்ளது.

பாதிக்கும் மேலானவர்கள் விவசாயத்திலும் குறைந்தது கால் பங்கு தொழிலாளர்கள் துணி அலங்கார வேலைப்பாடுகள் செய்தல், கம்பள நெசவுத் தொழில், தீக்குச்சி தயாரித்தல் அல்லது பீடி, சிகரெட்டுகள் சுருட்டுதல் போன்ற தொழில்களில் வேலை செய்கின்றனர்.

பலர் செங்கல் சூளைகளில் அல்லது சுரங்கங்களில் தங்களது பெற்றோர்களுக்கு உதவி செய்கின்றனர். கடைகளில், உணவகங்களில்,      தங்கும் விடுதிகளில் வேலை செய்கின்றனர், அத்துடன், நடுத்தர குடும்பங்களில் கடுமையான வீட்டு வேலைகளில் உழைத்து வருகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதில் உள்ள, தர்ம ஸ்தாபனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேல் அதிக அளவில் சார்ந்திருந்து ரகசிய தகவல்களை அளித்து, சோதனை செய்ய உள்ளூர் போலீஸுடன் அரசு அதிகாரிகள் திட்டமிடுதலில் அரிதாகவே ஈடுபடுகிறார்கள் என்று ஹார்வார்டு அறிக்கை கூறுகிறது.

பீகார் மாநிலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மாநிலத்திலிருந்து வரும் ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் வட மேற்கில் உள்ள ராஜஸ்தானுக்கு சென்று அடைகிறார்கள். இவர்களுக்கு புது டெல்லி ஒரு இடைத்தங்கல் நகரமாக விளங்குகிறது.

மீட்பு சோதனைகள் மோசமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுவதுடன் தொடர்பு மற்றும் போதிய வசதிகள் இன்மையால் பாதிக்கப்படுகின்றன. அதே சமயத்தில், தவறு இழைக்கும் முதளாளிகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் அரிதாகவே எடுக்கப்படுகின்றன என்று அந்த ஆறிக்கை மேலும் கூறுகிறது..

குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதில் உறுதி பூண்டுள்ளதாக இந்தியா கூறுகிறது. அதில் குறிப்பிட்த் தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு 12.6 மில்லியனாக இருந்த 14 அல்லது அதற்கு கீழ்ப்பட்ட வயதினையுடைய குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2011-இல் 4.5 மில்லியன் ஆகக் குறைந்துள்லது.

”அரசு சாரா அமைப்புகளுடன் உள்ளூர் போலீஸ் ஒருங்கிணைப்புடன் கூடிய  விரிவான மீட்பு மற்றும் புனர் நிர்மாண செயல் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இவைகள் தெளிவாக வெற்றிகரமான மற்றும் பயன் தருகின்ற செயல் திட்டங்கள்” என்று முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த ஓங்கார் சர்மா புது தில்லியில் கூறினார்.

”குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்த உள்ளோம்;  இச்சட்டம்  விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்” என்று நம்புகிறோம் என்று அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் மேலும் கூறினார்.

தற்போதைய சட்டம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 18 ஆபத்தான தொழில்களிலும் சுரங்க வேலைலகள், இரத்தினக் கற்களை வெட்டுதல் மற்றும் சிமெண்ட் உற்பத்தி போன்ற 65 செயல்முறைகளிலுமே மட்டுமே வேலை செய்வதைத் தடை செய்கிறது.

இது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை எல்லாத் துறைகளிலும் தடை செய்வதுடன் இச்சட்டம் 15 யிலிருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கென்று ஒரு புதிய வகையையும் இதில் உட்படுத்தப்படுகிறது.

ஆனால், சமூக ஆர்வலர்கள் பள்ளி நேரங்களைத் தாண்டி அல்லது விடுமுறை நாட்களில் குடும்பத் தொழிலில் உதவி செய்பவர்கள் மற்றும் பொழுதுபோக்கு அல்லது விளையாட்டுத் துறையில் தஙகள் கல்வி பாதிக்கத் வண்ணம் ஈடுபடுகின்றவர்கள் ஆகிய இரண்டு விதிவிலக்குகள் பற்றி தங்கள் கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும், 15 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகள் சுரங்கங்கள், எளிதில் தீப்பற்றுகின்ற பொருட்கள் மற்றும் ஆபத்தான செயல்முறைகள் ஆகிய மூன்று தொழிகளை மட்டுமே தடை செய்கிறது.

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யர்த்தி குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கம்(பச்பன் பச்சாவோ அந்தோலன்) என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட 80,000க்கும் மேலான குழந்தைகளை மீட்டுள்ள பெருமை பெற்றது. அவர் இந்த விதி விலக்குகள் பிற்போக்குத்தனமானது என்றும் எல்லா வகையான குழந்தைத் தொழிலாளர்களும் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் கடத்த வாய்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அரசு அமைப்புகளும் அரசு சாரா அமைப்புகளும் நல்ல முறையில் இணைந்து செயலாற்றுவதுடன், ஏழ்மையை தடுக்க தகுந்த கொள்கைகளை வகுக்கவும் கல்வி கிடைக்க அதிக வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்” என்று கூறுகின்றனர்.

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->