×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் கடத்தல்காரர்களால் 300,000 குழந்தைகள் தெருக்களில் பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளனர் - போலீஸ்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 1 June 2016 14:05 GMT

In this 2014 file photo a boy jumps onto a moving train at a railway station in New Delhi. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஜூன் 1  (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  போதைமருந்து கொடுத்து அடித்து உதைத்து நாள் தோறும் குறைந்தபட்சம் இந்தியாவில் 300,000 குழந்தைகள் கட்டாயப்படுத்தி கொஞ்சி பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர். ஆட்கடத்தல் கும்பல்களின் கட்டுப்பாட்டில் இது ஒரு பலமில்லியன் ரூபாய் தொழிலாகவும் மாறிவிட்டது என்று போலீஸும் மனித வியாபாரம் குறித்த வல்லுநர்களும் கூறுகின்றனர்.

இது குறித்த எழுதப்பட்டு (ஆய்வை) நாடு முழுக்க உள்ள காவல் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பவர்கள் வீதிகளில் வசிக்கும் குழந்தைகளை இன்னும் கூடுதலாக கண்காணிக்க இந்த எழுத்தாளர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூற்றின்படி இந்தியாவில்  ஆண்டுக்கு 40,000 குழந்தைகள் வரை கடத்தப்படுகின்றனர். இதில் குறைந்தபட்சம் 11,000 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர். 

”போலீஸுக்கு இந்த குழந்தைகள் பிச்சை எடுப்பது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை காரணம் அவர்கள் நினைப்பது இந்த குழந்தைளோடு பெரியவர்களும் இருக்க அவர்கள் கும்பத்தினரோ அல்லது அந்த குழந்தைக்கு அறியப்பட்ட நபராக இருக்கலாம் என்று கருதுகின்றனர்” என்கிறார் இந்த (ஆய்வு) அறிக்கையின் இணை எழுத்தாளர் (கோ-ஆத்தர்)  அனிதா கன்னையா . இவர் தி ஃப்ரீடம் புரெஜ்க்ட் இந்தியாவின் சி.இ.ஓ. . இது மனித வியாபாரம் என்கிற ஆட்கடத்தல் விவகாரங்களுக்கு எதிரான  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

’’ஆனால் மீட்கப்படும் ஒவ்வொரு ஐம்பது குழந்தைகளில் குறைந்தது பத்து குழந்தைகளாவது கடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர் மற்றும் அவர்களது அடையாளங்களை அறிந்து தகவல்களை கொடுக்க தொடர்ச்சியான விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியதிருக்கிறது’’ என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார் இந்த பெண்மணி.

சில நேரங்களில் குழந்தைகள் அதிக அளவு அனுதாபத்தை வெளிப்படுத்தி பிச்சையை பெற ஊனத்திற்கும் தீக்காயங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

பொதுவாக அவர்கள் இந்த தொழிலில் சம்பாதிக்கும் பணத்தை கடத்தல்காரர்களிடம் கொடுத்துவிடுகின்றனர் அல்லது மதுபானங்கள் மற்றும் போதைமருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த ஆய்வறிக்கை பெங்களூரு நகரின் போலீஸ் மற்றும் தொண்டு நிறுவனங்களின் அனுபவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

பருவ காலங்கள் அடிப்படையில் பிச்சை எடுக்கப்படுகிறது என்கிறது உள்ளூர் போலீஸ். எதாவது திருவிழாக்கள் அல்லது இயற்கைச் சீற்றம் போன்ற பருவ காலங்களில் குழந்தைகள் அலைந்து திரிவும் எண்ணிக்கை கூர்மையாக அதிகரிப்பதை பார்க்கமுடிகிறது.

2011 லில் பெங்களூர் போலீஸால் ஆபரேஷன் ரக்ஷனே( டு சேவ்) தொடங்கப்பட்டது. பல்வேறு அரசு துறைகள் மற்றும் தொண்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பிச்சை எடுக்க தள்ளப்பட்ட குழந்தைகளுக்கு உதவ அவர்கள் இந்த செயல் திட்டத்தை உருவாக்கினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொடர் மீட்புநடவடிக்கைகள் நகர் முழுக்க மேற்கொள்ளப்பட்டது, குழந்தைகள் வசித்துவந்த வீதிகளில் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை ஆவணமாக்கி அவர்களை படமும் எடுத்து  அவர்கள் வீடு திரும்ப கண்காணித்து நிழலிட்டிருந்தனர்.

’’நாங்கள் இதைத் தொடங்கியபோது கடத்தலுக்கும் பிச்சை எடுப்பதற்கு உள்ள தொடர்பு இருப்பதை எங்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் உன்னிப்பாக பெங்களூரு நகரின் தெருக்களில் இந்த தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதற்கான அடையாளங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியச் சென்றோம்’’ என்றார் கன்னைய்யா.

நகர் முழுக்க ஒரே நாளில் போலீஸ் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட ஆப்ரேஷன் மூலம் மூன்னூறு குழந்தைகள் மீட்கப்பட்டதாக இந்த ஆப்ரேஷனுக்கு முன்னிலை வகித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரோனோப் மொகந்தி தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

’’ஆபரேஷன் ரக்ஷனே என்பது ஒரு டெம்ப்ளேட் டாக இருக்கும். இது பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைக்க ஒரு மாடலாக எதிரொலிக்கும்’’ என்று அந்த கையேட்டில் கூறிய மொகந்தி, (ரகசிய)கண்காணிப்பு, தரவு சேகரிப்பு மற்றும் மறுவாழ்வு அதே போல் இதன் தொடர்புடைய சட்டங்கள் அடங்கிய பட்டியல்களும் இந்த கையேட்டில் அடங்கியுள்ளன என்று கூறினார்.

கன்னைய்யா கூறினார்: ‘’ நாங்கள் இப்போது இந்த புத்தகத்தை நாட்டின் ஒவ்வொரு போலீஸ் தலைமையகத்திற்கு எடுத்துக்கொண்டு திட்டமிட்ட பிரச்சாரம் ஒன்றை முன்னேடுக்க உள்ளோம். அதன் தொடர்ச்சியாக குழந்தை(பிச்சை) மற்றும் மீட்பு ஆப்ரேஷன் குறித்த கருத்தரங்கை போலீஸார்களுக்கு நடத்த இருக்கின்றோம்’’. (செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: அலெக்ஸ் விஹிடிங்க். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->