×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பூகம்பத்திற்கு பின்னர் ஆட்கடத்தல் விவகாரத்தில் நூற்றி அறுபதுக்கும் மேற்பட்ட நோபாளிகள் மீட்பு !

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 15 February 2016 00:02 GMT

In a file photo from 2011, Waseem Sheikh, 12, holding an improvised stick searches for rats with the help of a torch outside a residential complex in Mumbai. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

-  நீடா பல்லா (Nita Bhalla)

சிலிகுரி, மே.வங்களாம், பிப்.15(தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - கடந்தாண்டு நோபாளத்தில் நடந்த இரு பெரும் பூகம்பங்களுக்கு பின்னர் வட இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட நூற்றி அறுபதுக்குமேற்பட்ட நோபாளிகளை ஆட்கடத்தலுக்கு எதிரான போலீஸ் மீட்டதாக மூத்த ஒரு அதிகாரி கூறினார். 

வறிய ஏழ்மையான இமாச்சல நாடான நேபாளத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரட்டை பூகம்பம் ஏற்பட்டு எட்டாயிரத்தி எண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சுமார் இருபது லட்சம் பேர்கள் வீடுகளை இழந்தனர். இந்த பேரிழிவுகளுக்கு பின்னர் உயிர் பிழைத்து பாதிக்கப்பட்டவர்களை ஆட்கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக இரையாக்கிக் கொள்ளுவார்கள் என தொண்டு நிறுவனங்கள் அப்போது எச்சரிக்கையும் விட்டது. இதைத் தொடர்ந்து உத்திரபிரதேச மாநில அரசும் நேபாள எல்லையோர பகுதிகளில் உஷாராக இருக்க உத்தரவிட்டது.

‘‘ நிலநடுக்கம் ஏற்பட்ட நாளிலேயே நான் எனது அலுவலகத்திற்கு சென்று நேபாள எல்லையையட்டி இருக்கும் ஏழு மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்களுக்கும் [கலெக்டர்களுக்கும்], போலீஸ் கண்காணிப்பாளர்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடிதமாக அனுப்பினேன்‘‘ என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் கூறினார் உத்தரபிரதேஷ உள்துறைச் செயலாளர் கமல் சேக்சேனா[Kamal Saksena].

'' பிறகு நாங்கள் காணொளி காட்சி மூலமாகவும் கூட்டத்தை கூட்டி சம்பந்தப்பட்ட அனைத்து துறை அமைச்சகங்களையும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் தொழிலாளர் துறை வேறு பல சம்பந்தப்பட்ட துறையினரையும் இதில் பங்கெடுக்க வைத்து நாங்கள் இந்த விவகாரத்தில் தொடர்புகொள்ளவும் ஒருங்கிணைப்பு ஏற்படவும் வைத்தோம்.

நேபாளத்திலிருந்து ஆட்கடத்தல் என்பது நிலநடுக்கத்திற்கு முன்பே பெருமளவில் இருந்தது தான், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2001ம் ஆண்டின் ஆய்வின் படி ஆண்டுக்கு பன்னீரெண்டாயிரம்[12,000] நேபாளக் குழந்தைகள் இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கூறுவது, பேரழிவிற்குட்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களை ஏமாற்றும் ஆட்கடத்தல்காரர்கள் அல்லது ''இடைத்தரகர்''களின் ஆபத்து இந்த நில நடுக்கத்திற்கு பின்னர் அதிகமாக இருந்தது. இத்தோடு இப்படி குழந்தைகளை ஒப்படைப்பவர்களிடம் நல்ல மாத ஊதியம் நல்ல வேலை இந்தியாவில் வாங்கிக்கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தனர்.

ஆனால் உண்மை வேறு. சிறுமிகளும் பெண்களும் விபசாரத்திற்கு சேர்க்கப்படமுடியாத நிலையில் அவர்களை கொத்தடிமைகளாகவும் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் விற்கப்படுகிறார்கள். சிறுவர்கள் கட்டாய பணியில் அமர்த்தப்படுகிறர்கள்.

சேக்சேனா கூறுவது, நாலாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பயிற்சி அளிப்பதாகவும் இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட கலெக்டர்கள், ரயில்வே போலீஸ், எல்லை பாதுகாப்பு படையினர், சிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் தங்கும் விடுதி ஊழியர்களும் இதில் அடங்குவார்கள் என்கிறார்.

இந்த பயற்சியில் ஆட்கடத்தலுக்கு சந்தேகத்திற்குரிய இருக்கும் வழித்தடங்கள் சிலகுறிப்பிட்ட இடங்கள், ரயில்நிலையங்கள், எல்லைகளில் உள்ள செக்&போஸ்ட்டுகள் மற்றும் இன்டர்-ஸ்டேட் பேருந்து நிலையங்கள் போன்றவைகள் சோதனைக்குள்ளாக்கவேண்டும் என்பதும் அடங்கும்.

இதில் அவர்களுக்கு நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த விஷயங்கள் சந்தேகத்திற்குரிய ஆட்கடத்தல்காரர்களை எப்படி அடையாளம் காண்பது அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் கைது செய்வது சம்பந்தமான நடைமுறைகளையும் விளக்கப்பட்டது.

‘‘எப்படி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. உதாரணத்திற்கு சிலர் ஏராளமான குழந்தைகளுடன் போவார்கள்‘‘. கடந்த சனிக்கிழமை ஆட்கடத்தலுக்கு எதிராக சிலிகுரியில் நடந்த மாநாட்டிற்கிடையே இவைகளை நம்மிடம் சேக்சேனா பேட்டியின் போது குறிப்பிட்டார்.

‘‘ ஒரு சப்-இன்ஸ்பென்டர் பதினைந்து குழந்தைகளுடன் சென்ற நாற்பது வயது தம்பதியை இடைமறித்தார். அந்த குழந்தைகள் தாங்கள் பெற்றோருடன் மும்பையை சுற்றிப்பார்க்க[sight-seeing] போவதாக பொய் கூறினர். ஆனால் அவர்கள் ஆட்கடத்தல் காரர்களுக்கு தலா வெறும் ஆயிரத்தி ஐந்நூறு ரூபாய்($22) க்கு விற்கப்பட்டுள்ளனர்..‘‘

சேக்சேனா கூறுகையில் ஐம்பது முதல் அறுபது பேர்கள் வரை கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணையும் நடக்கிறது. கடந்த ஏப்ரல் முதல், மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலும் சொந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும் கூறுகிறார்.

‘‘ நில நடுக்கத்திற்கு முன்பு நாங்கள் உண்மையிலேயே இது போன்ற பயிற்சியை செய்யவில்லை. இப்ப மாறிவிட்டது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய உணர்திறனை உருவாக்கி ஒத்துழைப்பு ஏற்படுத்திய முழு முயற்சி இது‘‘. 

  (Reporting by Nita Bhalla; Editing by Ros Russell; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, corruption and climate change. Visit news.trust.org) 
((nita.bhalla@thomsonreuters.com; +91 11 4178 1033; Reuters Messaging: nita.bhalla.reuters.com@reuters.net))

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->