×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை பத்தாண்டுகளில் அறுபது சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 15 March 2016 05:27 GMT

in a 2014 file photo, a boy selling stuffed toys waits for customers at his roadside shop in the old quarters of Delhi. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

புதுடெல்லி, மார்ச் 15 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - ”இந்தியாவில் பத்து வருடங்களுக்கு முன் 12.6  மில்லியனாக இருந்த 14 வயது அல்லது அதற்கும் குறைந்த  வயதுடைய குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 4.5 மில்லியனாக குறைந்துள்ளது” என மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சர் கூறினார்; அவர் தற்போதுள்ள சட்டங்களை படிப்படியான  திட்டமிட்ட மாற்றங்களின் மூலம் இப் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுபவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.     

தொழிலாளர் நல அமைச்சர் ப்ண்டாரு  தத்தரேயா கூறுகையில் 30 ஆண்டுகள் பழமையான குழந்தைத் தடுப்புச் சட்டத்தை அரசு மாற்ற விழைகின்றது என்று மக்களவையில் திங்களன்று தெரிவித்தார். அத்துடன் அச் சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற ஆதரவு தருமாறும் கேட்டுக் கொண்டார்.

“குளிர்காலக் கூட்டத் தொடரில் மசோதாவை அறிமுகப்படுத்தியும் அது நிறைவேற்றப்பட முடியவில்லை; இக்கூட்டத் தொடரிலும் கூட நான் அறிவிப்புக் கொடுத்திருந்தும் அது நிறைவேற்றப்பட முடியாமல் போய்விட்டது” என தத்தேராய மேலும் கூறினார்.     

மே 8ஆம் தேதியோடு முடிவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடர், மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை  இடைவேளையில் இருக்கும் இந்த பாராளு மன்றத்தின் கூட்டத் தொடரிலே தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்திற்கு திருத்தங்கள்  கொண்டுவரப்பட உள்ளன.

இந்தியாவில் 2011 ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து தத்தேரியா குறிப்பிடும் புள்ளி விவரம் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 64 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது,      

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் பிப்ரவரி 2015-இல் வெளியிட்ட ஒரு அறிக்கை இந்தியாவில் 5 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 168 மில்லியனாக இருக்கின்ற உலகக் குழந்தைத் தொழிலாளர்களில், இந்தியாவில் 5.7 மில்லியனாக உள்ளது.  

பருத்தி, கரும்பு மற்றும் நெல் வயல்கள் போன்ற விவாசாயத் துறையில் பாடுபடுகின்ற பாதிக்கும் மேலான குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலான வேளைகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் தாக்கத்திற்கும் கூர்மையான உபகரணங்கள் மற்றும் பெரிய கருவிகளின் காயங்களுக்கும் உள்ளாகும் நிலைமை உள்ளது.     

 

குறைந்தது நாலில் ஒரு பங்கு மோசமான வெளிச்சத்தில், குறைந்த காற்றோட்டமுள்ள அறைகளில், துணிகளில் அலங்காரத் தையல், கம்பள நெசவு, தீக்குச்சிகள் தயாரிப்பு அல்லது பீடி, சிகரெட்டுகள் சுற்றுவது போன்ற உற்பத்தித் துறையில் வேலை செய்கின்றனர். பலர் செங்கல் சூளைகளிலும் சுரங்கங்களிலும் பெற்றோருக்கும் உதவி செய்கின்றனர்.      

குழந்தைகள் கடைகள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவற்றில் பாத்திரங்களைக் கழுவது, காய்கறிகள் நறுக்குவது அல்லது மத்திய தர குடும்பங்களில் வீடுகளைச் சுத்தப்படுத்தல், சிறு குழந்தைகளைக் கவனித்தல் போன்ற வேலகளையும் செய்கின்றனர்.   


14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுரங்க வேலை, இரத்தினக் கற்களைப் பட்டை தீட்டுதல் மற்றும் சிமெண்ட் தயாரிப்பு போன்ற 18 வகையான தீங்கு விளைவிக்கும் தொழில்கள் மற்றும் 65 செயல்முறைகளில் ஈடுபடுவதைத் தடை செய்ய அரசு தற்போதைய சட்டத் திருத்ததில் விரும்புகிறது.

இந்த சட்டத்தை  பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் அனைத்து துறைகளிலும் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணிசெய்ய தடை செய்வதோடு, புதிய வகையான 15 மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடை செய்யவும் மாற்றமும் நடந்திருக்கும்.

இந்த புதிய சட்டத்திருத்தின் மூலம் குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கு தண்டனையும் இரண்டு மடங்காகிறது. அதிகபட்ச சிறை தண்டனை இரண்டு ஆண்டுகளும் தற்போதுள்ள அபராதத் தொகை இருபதினாயிரத்திலிருந்து ஐம்பதினாயிரம் ரூபாயாகவும் உயரும்.

ஆனல் குழந்தை உரிமைகள் சமூக ஆர்வலரும் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யர்த்தி இரண்டு விதமான விதிவிலக்குகளில் கவலை வெளியிட்டுள்ளார்.

பள்ளி நேரங்களைத் தவிரவும் மற்றும் விடுமுறை நாட்களிலும் குடும்ப வியாபாரங்கள் மற்றும் குடும்பத் தொழில்களில் ஈடுபடுவதையும் மற்றும் பொழுது போக்கு விளையாட்டுகளில் படிப்பு பாதிக்காத வகையில் பணியாற்றுவதை அனுமதிப்பது.

இத்தோடு 15 வயது முதல் 18 வயது குழந்தைகள் மூன்று வகையான பிரிவுகளில் பணியாற்றுவதை மட்டும் தடை செய்கிறது. அது கனிம சுரங்கங்கள், தீப்பிடிக்கும் வகை சார்ந்த பொருட்கள் மற்றும் அபாயகரமான செயல் முறைகள் கொண்ட தொழில்களில் மட்டும்.

தனது தொண்டு நிறுவனமான குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கத்தின்(Bachpan Bachao Andolan) மூலம் 80,000 க்கும் மேற்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு சாதனை புரிந்த சத்யர்த்தி கூறுகையில் விதிவிலக்கு என்பது ’’பிற்போக்குத் தனமாது’’ குழந்தை உழைப்பின் அனைத்து வடிவங்களுக்கும் ஒட்டு மொத்த தடைதேவை என்கிறார்.

(செய்தியாளர்: நீதா பல்லா; எடிட் செய்தவர்: அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->