×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் ஏழை சிறுமிகளை அடையாளம் காண மென்பொருள் கடத்தலை தடுக்கவும் உதவும்-தொண்டு நிறுவனம்

by -ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Tuesday, 3 May 2016 11:20 GMT

A man uses a smartphone in this file photo. REUTERS/Mike Segar

Image Caption and Rights Information

மும்பை, மே 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மேற்கு வங்களாத்தில் மிக வறிய நிலையில் இருக்கும் பெண்களை அடையாளம் காணும் விதத்தில் டேப்லட்(வரைப்பட்டிகை) அடிப்படையிலான மென்பொருள் செயலி ஒன்றை, தொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் இளம்பெண்கள் கடத்தப்படுதல், வயது வருவதற்கு முன்பே திருமணம் செய்யப்படுதல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தப்படுத்துதல் ஆகியவை தடுத்திட சாத்தியமானது என அது கூறுகிறது.

தி ஜிபவர் அல்லது கேர்ள் பவர், என்கிற இந்த செயலியை ஆக்சென்ட்யூர் லேப்ஸ் மற்றும் சிஐஎன்ஐ ( சைல்டு இன் நீட் இன்ஸ்டியூட்) என்னும் தொண்டு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் மேற்கு வங்கத்தில் இருபது கிராமங்களில் உள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமாக உள்ள குடும்பங்களில் பெண்களின் இயக்கம் குறித்து (கண்காணிப்பு) தெரிந்து கொள்ள பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இளம் பெண்கள் ஊறுபடத்தக்க விதத்தில் உள்ள சுகாதாரம், ஊட்டச்சத்து உண்ணும் நிலை, கல்வி மற்றும் பாதுகாப்பு முதலியவை குறித்துத் தீர்மானிக்கக்கூடிய விதத்தில் இதில் ஒருவரைப்பற்றிய விவரங்களை இந்த மென்பொருளைக் கொண்டு தொகுக்க கோரும் கேள்விகள் வரிசையாக அடங்கியுள்ளன.

 “இந்தத் தொழில் நுட்பம் மிகவும் மோசமான அளவில் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய இளம்பெண்கள் குறித்த விவரங்களை ஒருசில நிமிடங்களில் அடையாளம் காட்டி நமக்கு உதவுகிறது,” என்று சிஐஎன்ஐ உதவி இயக்குநர், இந்திராணி பட்டாச்சார்யா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“ஆகையால், நிகழ்வுகள் நடந்தபின் ஏதாவது செய்வதற்கு முயற்சிப்பதற்குப் பதிலாக அவ்வாறு நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாகவே, அதாவது பெண்கள் கடத்தப்படுதல், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுத்திட உடனடியாக தலையிட்டு தீர்வுகள் காணப்படவும் நம்மால் திட்டமிடப்படுகிறது.

இதில் உள்ள வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்திட சுமார் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் அதன்மீதான ஆய்வு ஒருசில நிமிடங்களில் எடுக்கப்பட்டுவிடுகிறது. சேகரித்த தகவல்களின் அடிப்படையில், சமூக ஊழியர் மேற்படி பெண்கள் அரசின் நலத் திட்டங்களுக்குரிய விண்ணப்பதாரா, கலந்தாலோசனை அல்லது தொழிற் பயிற்சி பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்களா என்று தீர்மானிக்கிறார், என்று பட்டாச்சார்யா கூறினார்.

மேற்கு  வங்காளம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியியல் தொழிலிலுக்கு கடத்தப்படுவதற்கு ஆதாரமாகவும் இடைவழி மாநிலமாகவும் திகழ்கிறது, அதிகாரபூர்வமான தரவுகளின்படி. 2014ஆம் ஆண்டில் ஆட்கடத்தல் தொடர்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 5.466 வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது.

இவ்வாறு பலியானவர்களில் பலர் இந்த மாநிலத்தின் கிராமப்பகுதிகளிலிருந்தோ அல்லது அண்டை நாடான பங்களா தேஷிலிருந்தோ, நல்ல வேலை வாங்கித்தருகிறோம் அல்லது திருணம் செய்து வைக்கிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்டவர்களாவர்.  ஆனால் அவ்வாறெல்லாம் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் மும்பை மற்றும் புது தில்லி போன்ற மாநகரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக விற்கப்பட்டுவிடுகிறார்கள்.

ஜி-பவர்  என்பது குறிப்பாக  செல் பேசி நெட்-ஒர்க் ஏறுமாறாகவும், மின் வசதி ஒழுங்கற்றும் உள்ள  கிராமப்புற இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமுடைய ஒன்றாகும் என்று பெங்களூருவில் ஆக்சென்ட்யூர் லேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் போட்டர் கூறினார்.

“இதில் எளிதாக பிற மதிப்பீடுகளை அடக்கிவிட முடியும் அல்லது நாட்டிலுள்ள இதர சமூகப் பிரச்சனைகள் குறித்தும் எளிதாக தீர்வு கண முடியும்.” என்றும் அவர்

இந்தியாவில் செல் பேசிகள் தற்போது ஒரு பில்லியனுக்கும் (நூறு கோடி பேருக்கும்) அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய சந்தையாகும். கிராமப்புறங்களில் உள்ளோர் மத்தியில் சீதோஷண நிலையைத் தெரிந்து கொள்ளுதலிலிருந்து பண்டங்களின் விலைகளைத் தெரிந்து கொள்வது வரைக்கும் மற்றும் சுகாதார சேவைகளை அறிந்து கொள்வதற்கும் செல்பேசி சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது.

 “இந்தியாவில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏராளம். ஓர் அரசு சாரா நிறுவனத்தால் ஒரு அளவிற்கு தான் சென்றடைய முடியும்.“ என்று போட்டர் கூறினார்.

 “சமூகப் பிரச்சனை தீர்வு காணுவதற்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தேவையானது மட்டுமல்ல, அவசியமான ஒன்றுமாகும்.“ என்று அவர் கூறினார்.

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.) 

 

 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->