×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புச் செய்தி – இயற்கை முறைக்கு மாறி வரும் பருத்தி விவசாயம் அடிமைத்தனத்தை ஒழிக்க உதவுமா?

by Belinda Goldsmith | @BeeGoldsmith | Thomson Reuters Foundation
Friday, 10 February 2017 00:01 GMT

Woman farmer Kanchen Kanjarya participates in a training session in Mayapur village in the Indian state of Gujarat on Feb. 1, 2017, to learn about the best ways to pick cotton as part of an initiative to boost farmers’ income and tackle child and forced labour in the cotton industry. Thomson Reuters Foundation/Belinda Goldsmith

Image Caption and Rights Information

- பெலிண்டா கோல்ட்ஸ்மித்

மாயாபூர், பிப். 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான குஜராத்தில் உள்ள மாயாபூரில் இருக்கும் தன் சிறிய வயலில் உச்சிப்பொழுதின் சூரிய ஒளியில் காஞ்சன் கஞ்சார்யா கனத்த கையுறைகளை மாட்டிக் கொண்டு, முகத்தைச் சுற்றி ஒரு போர்வையை போர்த்தியபடி வேகமாக செடிகளிலிருந்து பருத்தியைப் பறித்துக் கொண்டிருந்தார்.

ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள தனது வயலில் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்யும் 42 வயதான கஞ்சார்யா, புகழ்பெற்ற மேற்கத்திய ஆடை நிறுவனங்களுக்காக ஆடைகளை உருவாக்கும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு பருத்தியை வழங்கி வரும் பல லட்சக்கணக்கான சிறு விவசாயிகளில் ஒருவர்.

நீண்ட பகல் நேரமும், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் கொண்ட பருவமாக இருந்த போதிலும் நீரின் தேவையையும், வேதிப் பொருட்களின் பயன்பாட்டையும் குறைத்து, லாபத்தை அதிகரிக்கச் செய்கின்ற, நீடித்த  வகையில் பருத்தியை உற்பத்தி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்ட, குறுகிய எண்ணிக்கையினராக இருந்தாலும், மெதுவாக அதிகரித்து வரும் விவசாயிகளில் ஒருவராக தானும் இருப்பது குறித்து கஞ்சார்யாவிற்கு மகிழ்ச்சிதான்.

உலக முழுவதிலும் உள்ள பருத்தித் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிலை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ள சூழலில், இந்த நவநாகரீக உலகத்தின் முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான இயற்கையான பருத்தி உற்பத்தியையும், அதன் சிக்கல் நிரம்பிய சப்ளைக்கான சங்கிலித் தொடரையும் தூய்மைப்படுத்துவதற்காக மேலும் மேலும் அதிகமான மேற்கத்திய நிறுவனங்கள்  விவசாயிகளுடன் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளன.

“இதில் கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக் கொண்டு எங்கள் குழந்தைகளின் படிப்பு, புதிய கருவிகளை வாங்குவது, எங்கள் வீடுகளைப் பழுது பார்ப்பது ஆகியவற்றில் எங்களால் முதலீடு செய்ய முடிகிறது” என தூசிபடிந்த சின்னஞ்சிறு கிராமமான  மாயாபூரில் இருக்கும் தன் வீட்டிற்கு வெளியே நின்றபடி புதிய குளியலறை, கழிப்பறை ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கஞ்சார்யா குறிப்பிட்டார்.

“ஒரு டிராக்டரை வாங்கியிருக்கிறேன். வேலைக்கு போவதற்கு ஒரு மோட்டார் சைக்கிளையும் என் மகனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எனது மூன்று மகள்களில் இரண்டு பேர் ஆசிரியைகள். என் குடும்பம் முழுவதற்குமே இது நன்மை தருவதாகத்தான் இருக்கிறது. எனது குழந்தைகளுக்கும் இப்போது நல்ல எதிர்காலம் இருக்கிறது.”

இந்தியாவின் மிகப்பெரும் பருத்தி, பருத்தி விதை உற்பத்தி மாநிலமான குஜராத்தில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும், குழந்தைத் தொழிலாளர் முறையை உடைத்தெறியவும் நிறுவனங்கள் எடுத்துள்ள  பல சிறிய முன்முயற்சிகளில் ஒன்றில் பங்கெடுத்து வரும் 1,250 பெண் விவசாயிகளில் ஒருவர்தான் கஞ்சார்யா.

பருத்தி உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்க நீரை சிறப்பாகப் பயன்படுத்துவது; இயற்கைஉரங்களைப் பயன்படுத்துவது; மண் வளம் ஆகிய நீடித்த விவசாய முறைகளில் கடந்த மூன்றாண்டுகளாக இந்த பெண் விவசாயிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டதோடு, மாதத்திற்கு இருமுறை வயலில் நேரடிப் பயிற்சியும் தரப்பட்டது.

பிரிட்டன் நாட்டின் சில்லறை விற்பனை நிறுவனமான ப்ரிமார்க் என்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன், இந்தியாவின் சுய வேலைவாய்ப்பிற்கான பெண்கள் கழகமான காட்டன் கனெக்ட் என்ற சமூக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்மாதிரி திட்டம் விவசாயிகளின் லாபத்தை இரண்டு மடங்காக ஆக்கியதோடு, கடந்த ஆறு ஆண்டுகளில் 10,000 விவசாயிகளுக்கு இத்திட்டம் விரிபடுத்தப்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தின்  நிறுவனர்கள் குறிப்பிட்டனர்.

Women farmers Hira Kanjarya (Left) and Kanchen Kanjarya pose and show their cotton at a field by Mayapur village in the Indian state of Gujarat on Wednesday Feb 1. Photo by Belinda Goldsmith/Thomson Reuters Foundation

உள்ளூரில் ஆதாரப் பொருட்களைத் திரட்டுவது

நாட்டின் மற்ற பகுதிகளில் 25,000 விவசாயிகள் இயற்கை முறையிலான பருத்தி உற்பத்தியை நோக்கி மாறுவதற்கு உதவும் வகையில் உலகளாவிய விற்பனைக் குழுமமான சி அண்ட் ஏ வுடன் இணைக்கப்பட்ட அமைப்பான சி அண்ட் ஏ ஃபவுண்டேஷன்  (ஆட்கடத்தல்  குறித்த விஷயங்களில் இது தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து செயல்பட்டு வரும் அமைப்பாகும்) பல்வேறு குழுக்களுடன் செயல்பட்டு வருகிறது.

ஒழுங்கு படுத்தப்பட்ட வகையில் நிலம், வேதிப் பொருட்கள், நீர் ஆகியவற்றை பயன்படுத்தி, நியாயமான முறையில் பருத்தி உற்பத்திக்கான செயல்பாடுகளுக்கு உறுதிபூண்ட வகையில் ஐக்கி, எச் அண்ட் எம், புர்பெர்ரி, அடிடாஸ் போன்ற விற்பனையாளர்கள் உள்ளிட்டு கிட்டத்தட்ட 1,000 உறுப்பினர்கள், 2005ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட லாப நோக்கற்ற பெட்டர் காட்டன் இனிஷியேட்டிவ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

 “பருத்தி உற்பத்தியில் நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்” என சமூக பொருளாதார விஷயங்களில் விவசாயிகளுடன் நேரடியாக செயல்படுவதற்கென 2009ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காட்டன் கனெக்ட் அமைப்பின் தலைமை நிர்வாகி அலிசன் வார்ட் குறிப்பிட்டார்.

 “உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. உள்ளூர் அளவிலேயே பொருட்களை வாங்கத் துவங்கும் நிலை ஏற்பட்டுள்லது. என்றாலும் பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலிக்கு நடுவே நுழைவதென்பது உண்மையிலேயே சவாலானதொரு விஷயம்தான்” என அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் உற்பத்தியாகும் பருத்தியில் 10முதல் 12 சதவீதம் மட்டுமே நீடித்த, இயற்கை முறையிலான பருத்தியாக உள்ளது என்று குறிப்பிட்ட வார்ட், வரலாற்று ரீதியாக அடிமை முறையால் பாதிக்கப்பட்ட இந்தப் பயிர்த் தொழிலில் தொழிலாளர்களை மோசமாக நடத்துவதை எதிர்த்துப் போராடுவது, லாபத்தை அதிகரிப்பது ஆகிய வகையிலான விவசாய முறைகளுக்கு மாறிச் செல்ல அதிகமான நேரமும் முயற்சியும் முதலீடும் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வயலில் இருந்து கடையைச் சென்று சேரும் பயணம் விதை உற்பத்தி, பருத்தி உற்பத்தி, பஞ்சையும் விதையையும் பிரிக்கும் ஜின்னிங் எனப்படும் தொழில் முறை, நூல் நூற்கும் தொழிற்சாலைகள், ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் என பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நிலையில் பருத்திக்கான சப்ளை சங்கிலியை உடைத்தெறிவதென்பது மிகவும் கடினமான ஒன்று என இத்தொழிலில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர். 

உலகளாவிய பருத்தித் தொழிலும் கூட மிகப் பிரம்மாண்டமானதே ஆகும். சுமார் 85 நாடுகளில் சுமார் 25 கோடி மக்களின் வாழ்வாதாரமாக அது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  இவைகளில் பல நாடுகள் ஏழை நாடுகள். இந்தியாவில்  40 லட்சம் பருத்தி விவசாயிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறையின் 2016ஆம் ஆண்டின் அறிக்கையின்படி பருத்தித் தொழிலில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் முறை எட்டு நாடுகளில் நிலவி வருவதாக ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் அரசே முன்னின்று கட்டாய வேலையை வாங்குவதாக உஸ்பெகிஸ்தான், துர்க்மீனிஸ்தான் ஆகிய நாடுகள் விரிவான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளன. இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் முறை நிலவி வருகிறது.

சீனாவிற்கு அடுத்தபடியாகவும், அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு முன்பாகவும் உலகின் இரண்டாவது மிகப்பெரும் பருத்தி உற்பத்தி நாடாக விளங்கும் இந்தியா, பருத்தி விதை உற்பத்தி, பருத்தி உற்பத்தி ஆகிய இரண்டிலுமே குழந்தைத் தொழிலாளர் முறை, கட்டாய உழைப்பு முறை ஆகியவற்றைக் கொண்ட ஒரே நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் ரக விதைகளை உற்பத்தி செய்வதற்கான மாற்று பூந்தாது தூவும் வேலையில் சின்னஞ் சிறு கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், பருத்தி விதை பண்ணைகளில் வேலை செய்யும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டிலிருந்து இரண்டு மடங்காக 2,00,000 –ஐ எட்டியுள்ளது என க்ளோபல் ரிசர்ச்-இன் இந்தியக் குழுவின் “பருத்தியால் மறக்கப்பட்ட சிறுவர்கள்” என்ற 2014ஆம் ஆண்டு ஆய்வு கண்டறிந்துள்ளது.

லாபம் தரக்கூடிய இந்தப் பயிரைப் பயிரிட மேலும் அதிகமான சிறுவிவசாயிகள் முன்வந்துள்ள நிலையில் இந்த நிலைமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்பதை இந்த ஆண்டு வெளியிடப்படவுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது என்றும் அதன் இயக்குநர் தாவுலூரி வெங்கடேஸ்வர்லு குறிப்பிட்டார்.

பள்ளிக்கு அவர்கள் தொடர்ந்து போய் வருவதாக இருக்கும் பட்சத்தில் 14 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை குடும்ப வேலைகளில் ஈடுபடுத்துவதை சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டம் அனுமதித்துள்ள நிலையில், குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதே இதன் பொருளாகும்.

செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது

 “குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளில் நிலைமை மிக மோசமாகி உள்ளது. குடும்ப வேலை என்பதை எப்படி விளக்க முடியும்? பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் உண்மையிலேயே பள்ளிகளுக்குப் போகிறார்களா?  என்பது போன்ற பிரச்சனையும் தொடர்ந்து நிலவுகிறது” என குறிப்பிடும் வெங்கடேஸ்வர்லு, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் போதிய அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு செயல்படும் பெட்டர் காட்டன் இனிஷியேட்டிவ், காட்டன் கனெக்ட் போன்ற குழுக்களின் தலையீடுகள் ஓரளவிற்கு இதில் உதவிகரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பருத்திவிதைப் பண்ணைகளை தூய்மைப்படுத்த எடுக்கப்படவுள்ள பெரும் நடவடிக்கைகளுக்குப் பிறகு குஜராத்தில் இத்தொழிலில் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது என்று குஜராத் மாநிலத்தின் கிராமப்புற தொழிலாளர்களுக்கான துணை  ஆணையர் எம்.சி. கரினா நம்பிக்கை தெரிவித்தார்.

“இத்தகைய கவலை குறித்து கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பருத்தி விதைப் பண்ணைகளில் ஒரே ஒரு சிறுவன் கூட வேலை செய்யவில்லை என்று என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியும்”என்று அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

மிகவும் சிக்கலான பருத்தி சப்ளை சங்கிலியில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையில், தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், நெறிமுறை குறித்த தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றவும் சர்வதேச புகழ் பெற்ற நிறுவனங்கள் மேலும் மேலும் அதிகமான அளவில் களத்தில் இறங்கியுள்ளன.

வழக்கமான பருத்திக்குக் கிடைக்கும் அதே விலையில் நெறிமுறையுடன் நீடித்த தன்மையுடன் இயற்கையான முறையிலான பருத்தியை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டறிய தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக ப்ரிமார்க் நிறுவனத்தின் நெறிமுறை சார்ந்த வர்த்தகம் மற்றும் சுற்றுசூழலை நிலை நிற்கச் செய்வதற்கான இயக்குநரான காதரீன் ஸ்டூவர்ட் தெரிவித்தார். இயற்கை முறையிலான உற்பத்தி, நியாயமான வர்த்தகம் என்பது மதிப்பு மிக்கதும் ஆகும்.

அசோசியேட்டட் பிரிட்டிஷ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான ப்ரிமார்க் 5அமெரிக்க டாலர் விலைக்கு டீ ஷர்ட் போன்று குறைந்த விலை கொண்ட உடைகளை 11 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. தொழிலாளர்களைச் சுரண்டாமல் எப்படி இவ்வளவு மலிவாக ஆடைகளை அதனால் தயாரிக்க முடிகிறது என்பதை விளக்க வேண்டும் என்று தொடர்ந்து அதன் மீது நெருக்கடி இருந்து வருகிறது.

அதிகமான அளவில் அதே நேரத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்வது என்ற வர்த்தக வடிவத்தை பின்பற்றி வரும் தனது நிறுவனம் தொடர்ச்சியாகவும், திடீர் திடீரெனவும் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களுக்கு சப்ளை செய்யும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை நன்றாக நடத்துவதையும், குறைந்த பட்ச ஊதியத்தைத் தருவதையும் உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட ஸ்டூவர்ட், இந்த சப்ளை சங்கிலியை மேலும் ஆழமாக கண்காணிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.

“விவசாய உற்பத்தியைப் பற்றிப் பேசும்போது கீழிருந்து மேலே செல்வதே எளிதானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். அதன் பிறகு இந்த சப்ளை சங்கிலியின் இரண்டு முனைகளிலிருந்து இவை அனைத்தையும்  இணைப்பதற்காகச் செயல்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரித் திட்டம் வழக்கமான பருத்தியின் அதே விலையில் நீடித்த முறையிலான பருத்தியையும் உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எனினும் இதற்காக முதலீடு செய்யப்பட்ட ‘கணிசமான’ தொகையைப் பற்றிய விவரங்களை ப்ரிமார்க் தெரிவிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 “பருத்தியைப் பொறுத்தவரையில் ஏதாவது செய்யவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். நாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை மக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர்” என்று ஸ்டூவர்ட் குறிப்பிட்டார். “எதற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உங்களால் செய்து விடவும் முடியாது.”

அதை தூய்மைப்படுத்துவதற்கு பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் பருத்தி தொழிலில் உள்ள சப்ளை சங்கிலி தொடர்ந்து கறைபடிந்ததாகவே இருந்து வருகிறது என யார்ன் எதிக்கலி அண்ட் சஸ்டெய்னப்ளி சோர்ஸ்ட் (யெஸ்) என்ற முன்முயற்சியை நெசவாலைகளில் உருவாக்கியவரும் ரெஸ்பான்சிபிள் சோர்சிங் நெட்வொர்க் அமைப்பின் இயக்குநருமான பாட்ரிஷியா ஜுரேவிச் குறிப்பிட்டார்.

“கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மேம்பட்டு வருகிறது. மோசமான நடத்தையுடன் தங்களை தொடர்பு படுத்தக்கூடாது என்ற எண்ணத்துடன் புகழ் பெற்ற நிறுவனங்கள் உற்பத்தியில் இணையும்போது இது கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். “எனினும் செல்ல வேண்டிய தூரம் இன்னும் கூடவே உள்ளது.”

(மும்பையிலிருந்து கூடுதல் செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; @BeeGoldsmith, எடிட்டிங்:ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Women farmers Kanchen Kanjarya and Hira Kanjarya picking cotton in a field by Mayapur village in the Indian state of Gujarat on Wednesday Feb 1. Photo by Belinda Goldsmith/Thomson Reuters Foundation

"LONG WAY TO GO"

"In pockets of Gujarat and Rajasthan the situation has deteriorated and the issue is what defines a family enterprise and whether children registered for school do attend," said Venkateswarlu, blasting state governments for not doing enough.

He said interventions by such groups as the Better Cotton Initiative and CottonConnect involving companies were helping.

M. C. Karina, deputy rural labour commissioner for Gujarat, was confident the industry in Gujarat was free of child labour after a major drive to clean up cottonseed farms.

"We've been working on this concern for the last eight years and are now sure that not a single child is working on the cottonseed farms," he told the Thomson Reuters Foundation.

With the complexity and lack of transparency in the cotton supply chain, international brands are getting more involved for the sake of their reputation and to meet ethical commitments.

Katharine Stewart, Primark's ethical trade and environmental sustainability director, said her company set out to find an ethical and sustainable way to produce cotton at the same price as conventional cotton. Organic and Fairtrade has a premium.

Primark, part of Associated British Foods, sells low-priced clothes such as $5 T-shirts in 11 countries, and is constantly under pressure to explain how it makes clothes so cheaply without exploiting workers.

Stewart said the retailer, with a high volume, low cost business model, ensured workers were well treated in supplier factories and paid at least the minimum wage with regular and surprise audits but wanted to dig further into the supply chain.

"We thought it would be easier to go bottom up when you are talking about agricultural production and then work from both ends of the supply chain to join it all together," she said.

She said the Gujarat pilot proved sustainable cotton could be produced at the same price as conventional cotton but Primark would not give figures for the "significant" amount invested.

"We are looking and trying to do something about cotton and people are watching closely what we are doing," said Stewart. "But you have to pick where you are going to prioritise. You can't do it all at once."

Patricia Jurewicz, director of the Responsible Sourcing Network and creator of initiative Yarn Ethically and Sustainably Sourced (YESS) working in spinning mills, said the cotton supply chain remained tainted despite initiatives to clean it up.

"There are improvements little by little and the most where brands get involved in production as they don't want to be linked to abuse," she said. "But there's a long way to go".

($1 = 0.7997 pounds) (Additional reporting by Roli Srivastava in Mumbai, @BeeGoldsmith, Editing by Ros Russell.; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, property rights and climate change. Visit http://news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->