×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – முன்பு பாலியல் தொழிலில் அடிமையாக இருந்தவர் மும்பையில் ஓர் அறை வீட்டில் தனது சுதந்திரத்தை உணர்கிறார்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 30 August 2017 08:30 GMT

Sex slavery survivor Sonika in her flat on Mumbai’s outskirts, August 10, 2017. THOMSON REUTERS FOUNDATION/Roli Srivastava

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, ஆக. 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஒரு வேலைநாளில் காலை நேரத்தில் மும்பையின் வெளிப்புறப் பகுதியில் உள்ள தனது ஓர் அறை குடியிருப்பில் சோனிகா வேலைக்குச் செல்வதற்காக காலை 8.45 மணி பேருந்தைப் பிடிப்பதற்கு முன்பாக தனது மதிய உணவுப் பெட்டியை தயார் செய்து விட்டு, கருப்பு நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்து கொண்டு, ஜவ்வரிசியால் தயாரிக்கப்பட்ட காலை உணவை உண்டு விட்டு, அவசர அவசரமாக தன்னை சுய புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்கிறார்.

வேலைக்குப் போகும் மற்ற பெண்களில் இருந்து அவரது காலை நேர பழக்க வழக்கங்கள் சற்று மாறுபட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. எனினும் 19 வயதான சோனிகா மற்ற பெரும்பாலானவர்களை விட வழக்கமான வேலைகளை பெரிதும் விரும்புகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் பாலியல் தொழிலில் அடிமையாக இருந்தார். உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கிட்டத்தட்ட  ஐந்தாண்டுகளுக்கு அவர் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தார்.

என் வாழ்க்கையையே நான் வெறுத்தேன்; என்றாலும் எனக்கு வேறு வழியேதுமில்லை. எனது நாட்கள் 18 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக நீண்டிருந்தது. நான் இறந்து போக விரும்பினேன்என்று வெறும் 13 வயதாக இருந்தபோது விபச்சாரியாக வேலை செய்வதற்காக கடத்தப்பட்ட சோனிகா குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு துவக்கத்தில்தான் மற்றொருவருடன் அவர் பகிர்ந்து கொள்ளும் இந்த எளிமையான வீட்டிற்கு சோனிகா குடிபெயர்ந்தார். இத்தகைய ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு உதவி செய்யும் ஓர் அறக்கட்டளையான ‌ஷமாதா இத்தகைய முயற்சியை மேற்கொள்ள அவருக்கு உதவி செய்தது.

இங்கே நான் பாதுகாப்பாக உணர்கிறேன். எனக்கேயுரிய நிகழ்ச்சி நிரலை பின்பற்றுகிறேன். நான் விரும்புவதைச் செய்கிறேன்என தனது குடியிருப்பில் சப்பணமிட்டு அமர்ந்தபடி சோனிகா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

தனது முழுப்பெயரை வெளியிட விரும்பாத சோனிகா, வேலையைத் தேடிக் கொள்ளவும் சுதந்திரமாக வாழவும் ஷமாதாவினால் உதவி செய்யப்பட்ட ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேரில் ஒருவர் ஆவார்.

இந்தியாவில் வணிகரீதியாகச் செயல்படும் பாலியல் தொழிலாளிகளின் எண்ணிக்கை 2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது; இதில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டவர்கள் ஆவர் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட பாதிப்பேர் பதின்பருவத்தினராகவும், குழந்தைகளாகவும் உள்ளனர். அதில் ஒரு சிலர் வெறும் ஒன்பது வயது மட்டுமே ஆனவர்கள்.

இதிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த இனத்தவரிடையே திரும்பிய பிறகு வருமானத்திற்கான மாற்றுவழி எதையும் காண முடியாததாலோ அல்லது வாழ்வதற்கான வழிவகைகளுக்கான வாய்ப்புகள் இல்லாததாலோ மீண்டும் ஆட்கடத்தலுக்கு  இரையாகின்றனர் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரசு மற்றும் அறக்கட்டளைகள் நடத்தும் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி தரப்படுகிறது. அவர்களில் ஒரு சிலருக்கு வேலையும் கிடைக்கிறது. எனினும் அவர்களின் புதிய வீடாக மாறிவிட்ட அந்த விடுதிகளிலிருந்து ஒரு சிலர் மட்டுமே வெளியே செல்கின்றனர்.

 “அவர்கள் நிறுவன ரீதியான பாதுகாப்பை விட்டு வெளியே செல்வதில்லை; அவர்கள் சுதந்திரமாகவும் இல்லைஎன ‌ஷமாதா அறக்கட்டளையின் நிறுவனரான பாரதி தஹிலியானி குறிப்பிட்டார். ‌ஷமாதா என்ற இந்தி வார்த்தைக்கு செயல் வல்லமை என்று பொருளாகும்.

சோனிகா தனது காப்பகத்தை விட்டு வெளியே வந்து தனியாக வாழ்வதும், தனது சக அறைவாசி மற்றும் தனது சக தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதும் எங்களுக்கு ஒரு வெற்றியே ஆகும்; இது அவருக்குமான வெற்றியும் ஆகும்என தஹிலியானி கூறினார்.

கூடை முடைதல்

இந்தியாவில் ஆட்கடத்தல் வழக்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது என்பதை சமீபத்திய இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகைய பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகும் இளம்பெண்களுக்கு பண இழப்பீட்டிற்கான திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியிருக்கும் அதே நேரத்தில் இதில் பாதிக்கப்பட்ட இதர பெண்களுக்கு இத்தகைய உதவி எதுவும் கிடைப்பதில்லை.

இந்தியாவில் விபச்சாரம் என்பது சட்டவிரோதமானதாகும். காவல்துறையினர்  பாலியல் தொழில் மையங்களில் சோதனையிடும்போது இத்தகைய பெண்கள் அவர்களால் ‘மீட்கப் படுகின்றனர்’.

2007ஆம் ஆண்டில் இவ்வாறு மீட்கப்பட்ட பெண்கள் குறித்த ஆய்வு ஒன்றை நாங்கள் மேற்கொண்டோம். அவர்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே சமூகத்தோடு ஒன்றிணைகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்களை எங்களை கண்டுபிடிக்க முடியவில்லை” என சமூக செயல்பாட்டாளரும் பிரச்சாரகருமான தஹிலியானி குறிப்பிட்டார்.

இத்தகைய ஆட்கடத்தலில்  பாதிக்கப்பட்டவர்கள் நிதிரீதியாக சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு உதவி செய்ய தஹிலியான 2013ஆம் ஆண்டில் க்‌ஷமாதாவை தோற்றுவித்தார். “மீண்டும் கடத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அதுதான் ஒரே வழியாகும்.”

ஒரு சில அறக்கட்டளைகளில் இவர்களின் மறுவாழ்விற்கான திட்டங்கள் வழக்கமான கைவேலைப்பாடுகள், கூடை முடைதல் போன்ற பயிற்சிகளிலிருந்து வேலைக்கான ஆலோசனை, பொது மேடைகளில் பேசுவதற்கான பயிற்சிகள் என்பதாக மாறியுள்ளது என க்‌ஷமாதாவில் ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களுக்கான பயிற்சி முறைகளை உருவாக்கி நடத்தி வரும் ப்ரதிஷ்டா காலே கூறினார்.

 “இந்தப் பெண்கள் மிகவும் இளமையானவர்கள்; பெரும்பாலான நேரங்களில் தங்களுக்கான வேலையைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் குழப்பத்தோடு உள்ளனர். எனவே நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உகந்த வகையில் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள நாங்கள் உதவி செய்கிறோம்” என காலே குறிப்பிட்டார்.

சேவ் த சில்ட்ரன் இந்தியா என்பது போன்ற இதர அறக்கட்டளைகளும் இதே போன்ற மறுவாழ்வுக்கான முறைகள் குறித்து  செயல்பட்டு வருகின்றன.

 “அறக்கட்டளைகளாலும் அரசினாலும் நடத்தப்படும்  காப்பகங்கள் உள்ளன. அவற்றில் குறைந்த செலவில் உழைக்கும் பெண்கள் தங்கியிருக்க முடியும். எனிமும் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தனியாகத் தங்கியிருப்பதையே விரும்புகின்றனர்” என சேவ் த சில்ட்ரன் இந்தியா அமைப்பின் திட்ட இயக்குநரான ஜோதி நாலே குறிப்பிட்டார்.

 “நல்ல (வேலை)வாய்ப்புகளும் உள்ளன. சில நேரங்களில் இதிலிருந்து மீண்டவர்களின் கல்வி அளவு நன்றாகவே உள்ளதால், அவர்கள் வேலையைத் தேடிக் கொள்ள உதவியாக உள்ளது. இதுதான் முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்.”

 ‘கனவு வாழ்க்கை’

நான்காவது வரை மட்டுமே படித்திருந்த சோனிகா தனது முதல் வேலையான நகைக்கடையில் அவரது முதலாளி வாடிக்கையாளர்களிடம் அவர் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று எதிர்பார்த்ததால்  சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தது.

க்‌ஷமாதாவைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டாளர் அவருக்கு ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க உதவி செய்தார். அங்கே அவர் துணிகளை கடைகளுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதுடன்  தன்னிடம் உள்ள குறிப்பேட்டில் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பதிவு செய்து கொள்ள வேண்டியுள்ளது.

அவரது ஒன்பது மணி நேர வேலையின் மூலம் அவர் மாதமொன்றுக்கு ரூ. 9,000 ஊதியமாகப் பெறுகிறார். தனது குடியிருப்பின் வாடகையான ரூ. 4,000-ஐ தனது அறைவாசியுடன் அவர் சமமாகப் பகிர்ந்து கொள்கிறார். அவரும் கூட ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்தான். அவர் இப்போது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்து மாதம் ரூ. 12,000 ஊதியம் ஈட்டுகிறார்.

இதற்கு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட மற்றொருவரான நவ்யா இதே போன்ற ஓர் அறை குடியிருப்பில் தங்கியிருந்தபடி தெற்கு மும்பையில் உள்ள நவநாகரீக முடிதிருத்தகத்தில் வேலை செய்ய மும்பையின் எப்போதும் நெரிசலாகவே இருக்கும் உள்ளூர் ரயில்களில் தினமும் நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

என்றாலும் சோர்வை ஏற்படுத்தும் பயணம், நீண்ட வேலை நேரம் ஆகிய மும்பையில் வழக்கமான வேலை நிலைமைகள் அவர்களை கவலைக்கு ஆளாக்குவதில்லை. சுய நம்பிக்கையற்ற நிலை, குடியிருப்புகளை அவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்குத் தயங்கும் வீட்டு உரிமையாளர்கள் ஆகியவற்றுக்கே இந்தப் பெண்கள் போராட வேண்டியுள்ளது. நகரத்தில் தனியாக வசிக்கும் பெண்கள் பலரும் இத்தகைய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.

“க்‌ஷமாதாவில் உள்ளவர்களிடம் தான் தனியாக வாழ விரும்புகிறேன் என்று சொன்ன பிறகுதான், நான் மிகவும் அதிகமாகவே கற்பனை செய்கிறேன் என்பதை உணர்ந்தேன்” என சோனிகா குறிப்பிட்டார். எனினும் எதையும் சமாளிக்கக் கற்றுக்  கொண்டவர் என்ற வகையில் வீடு தேடும் படலத்தின்போது அவர் தனது தோழியின் கணவரையும் அழைத்துச் சென்றதன் விளைவாக இறுதியில் ஒரு குடியிருப்பை கண்டுபிடிக்க முடிந்தது.

 “எனது இந்த வீட்டை நான் மிகவும் விரும்புகிறேன். நான் எப்போதுமே கனவு கண்டு வந்த வாழ்க்கை இதுதான்” என்று அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

BASKET WEAVING

Recent Indian government data has shown a year-on-year rise in trafficking cases in India, but while the government has a cash compensation scheme for youth victims of sexual assault, adult survivors get no such support.

Prostitution is illegal in India and girls are often "rescued" by police during raids on brothels.

"We did a study on rescued girls in 2007 and found less than 10 percent had reintegrated into the society. We couldn't trace most rescued girls," said Tahiliani, a social worker and campaigner.

Tahiliani founded Kshamata in 2013 to support trafficking survivors become financially independent as it was "the only way to protect them from being trafficked again".

Rehabilitation programmes at some charities have moved from traditional embroidery and basket weaving lessons to career counselling and public speaking sessions, said Pratishta Kale, who runs training modules for trafficking survivors at Kshamata.

"The girls are young and often confused about their career choices. So we guide them and help them find a job in line with their interests," Kale said.

Other charities such as Save the Children India also are working on similar rehabilitation models.

"There are shelters and hostels run by charities and also the government where working girls can stay at a subsidised rate but over the last few years, they prefer to stay independently," said Jyoti Nale, programme director for Save the Children India.

"There are better (work) opportunities. In some cases, the education level of survivors is better, helping them find a job. This is the best way forward."

Commuters are seen iside a train carriage in Mumbai, August 11, 2017. THOMSON REUTERS FOUNDATION/Roli Srivastava

'DREAM LIFE'

Sonika, who studied up to fourth grade, struggled in her first job at a jewellery store as her employer expected her to talk to customers in English.

A volunteer at Kshamata helped her find a job with a garment firm where she delivers clothes to shops and collects money from them and jots down each transaction in her notebook.

Her nine-hour schedule earns her 9,000 Indian rupees ($140) a month and she splits her flat's monthly rent of 4,000 rupees with her flatmate - also a sex trafficking survivor who works as a sales assistant at a supermarket and earns 12,000 rupees.

About a mile away, another trafficking survivor, Navya, stays in a similar one-room apartment and negotiates a four-hour daily commute in Mumbai's packed local trains to work at an upscale hair salon in South Mumbai.

But tiring commutes and long hours that are typical of working life in Mumbai are the least of their concerns. The girls battle a lack of confidence and reluctance of landlords to lease flats to them - a problem faced by many single women in the city.

"It was after I told people at Kshamata that I wanted to live on my own, I realised I had possibly dreamt too big," Sonika said. But taught to be resourceful, she roped in her friend's husband in her flat hunt and eventually found one.

"I like my house. This is the life I always dreamt of for myself," she said.

($1 = 64.1225 Indian rupees)

(Reporting by Roli Srivastava @Rolionaroll; Editing by Ros Russell. Please credit Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, property rights, climate change and resilience. Visit news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->